Published:Updated:

``திரும்பத் திரும்ப அதேத் தவற்றை செய்கிறார் ஸ்டாலின்!" - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

``கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைக் கூறவில்லையென்றால் பரவாயில்லை. மாநிலத்தின் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்." - வானதி சீனிவாசன்

``திரும்பத் திரும்ப அதேத் தவற்றை செய்கிறார் ஸ்டாலின்!" - வானதி சீனிவாசன்

``கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைக் கூறவில்லையென்றால் பரவாயில்லை. மாநிலத்தின் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்." - வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்

கோவை, காந்திபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்திவருகிறேன்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளிலுள்ள 10 முக்கியக் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு முதல்வர் கூறியிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கோவை தெற்குத் தொகுதிக்குட்பட்ட 10 முக்கியப் பிரச்னைகளின் பட்டியலை அளித்திருக்கிறேன். ஒரு கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறவில்லையென்றால் பரவாயில்லை.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

ஆனால், மாநிலத்தின் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். தொடர்ந்து அவர் இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்காமல் இருக்கிறார்.

இது குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் கேள்வி கேட்டபோது, மழுப்பலாக பதிலளித்தாரே தவிர, எல்லோருக்கும் பொதுவான முதல்வர் என்று சொல்லவில்லை. சிறுபான்மை மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர், இந்துக்கள் பண்டிகைகளை ஒதுக்குகிறார்.

வானதி சீனிவாசன் ஆட்சியர் சமீரன்
வானதி சீனிவாசன் ஆட்சியர் சமீரன்

முதல்வர் திரும்பத் திரும்ப அந்தத் தவற்றைச் செய்துகொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானவுடன் ஒரு பேச்சு என்பதை தி.மு.க வழக்கமாகக்கொண்டிருக்கிறது“ என்றார்.