Published:Updated:

கே.பி.அன்பழகனுக்குத் தொடர்புடைய இடங்களில் ரெய்டு; கணக்கில் வராத ரூ2.65 கோடி பறிமுதல்!

அமைச்சர் அன்பழகன்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குத் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ2.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கே.பி.அன்பழகனுக்குத் தொடர்புடைய இடங்களில் ரெய்டு; கணக்கில் வராத ரூ2.65 கோடி பறிமுதல்!

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குத் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ2.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Published:Updated:
அமைச்சர் அன்பழகன்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குத் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டு, அவருக்குச் சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.

செய்திக்குறிப்பு
செய்திக்குறிப்பு

தருமபுரி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்றது. மேலும் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா அன்பழகன், அவர் மகன்கள் சசி மோகன், சந்திர மோகன், அவர் மருமகள் வைஷ்ணவி ஆகிய ஐந்து பேர்மீது வழக்கு பதிவு செய்து தருமபுரி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குச் சொந்தமான 58 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2.87 கோடி ரொக்கமும், 6.637 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி நகைகளும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் கணக்கில் வராத பணம் ரூபாய் 2,65,31,650, வங்கிப் பெட்டக சாவி, வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகிவை கைப்பற்றப்பட்டன" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்துவருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism