Published:Updated:

``ஓ.பி.எஸ் கடிதம் கிடைக்கவில்லை; பொதுக்குழு நடக்கும், அவர் வருவார்” - கே.பி.முனுசாமி உறுதி

முனுசாமி

``திட்டமிட்டப்படி அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு நடைபெறும்” என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

``ஓ.பி.எஸ் கடிதம் கிடைக்கவில்லை; பொதுக்குழு நடக்கும், அவர் வருவார்” - கே.பி.முனுசாமி உறுதி

``திட்டமிட்டப்படி அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு நடைபெறும்” என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
முனுசாமி

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் உட்கட்சிப்பூசலாக மாறி அந்தக் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதையொட்டி, அதிமுக-வினர் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்துகிடக்கின்றனர். மேலும், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தி இ.பி.எஸ்-ஸுக்கு பகிரங்கமாகக் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதிமுக - பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக - பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, "அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி கழக நிர்வாகிகளோடும், தொண்டர்களோடும் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் உறுதியாக நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி, தீர்மானத்தைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஒப்புதல் கொடுத்தார். பொதுக்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்பது அவரின் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்டது. இபிஎஸ் -ஸுக்கு ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ஓ.பி.எஸ் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றிருந்தால் இ.பி.எஸ் எங்களிடம் தெரிவித்திருப்பார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிமுக கூட்டம்
அதிமுக கூட்டம்

உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுவரும் அதிமுக நாளை ஆட்சிக்கு வருவதற்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒருசில சந்தர்ப்பவாதிகள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, இந்த இயக்கத்துக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்கிறார்கள். காலம் அவர்களுக்கு சரியான தண்டனையை வழங்கும்.

ஓ.பி.எஸ் நீண்டகாலமாக கட்சியில் இருக்கிறார். அவர் இந்தக் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ஓ.பி.எஸ் உறுதியாக பொதுக்குழுவில் கலந்துகொண்டு தன்னுடைய கருத்துகளைக் கூறுவார். பொதுக்குழு என்ன முடிவு எடுக்கிறதோ அந்த முடிவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எங்களைப் போன்றவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism