Published:Updated:

பெட்ரோல் விலை உயர்வு: ``மன்மோகன் சிங்கால் முடிந்தது; மோடியால் ஏன் முடியவில்லை!" - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

``அதிக வரிவிதிப்புதான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையேற்றத்திற்குக் காரணமாக உள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங்கால் முடிந்தது ஏன் இன்று மோடியால் முடியவில்லை?” - கே.எஸ்.அழகிரி

பெட்ரோல் விலை உயர்வு: ``மன்மோகன் சிங்கால் முடிந்தது; மோடியால் ஏன் முடியவில்லை!" - கே.எஸ்.அழகிரி

``அதிக வரிவிதிப்புதான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையேற்றத்திற்குக் காரணமாக உள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங்கால் முடிந்தது ஏன் இன்று மோடியால் முடியவில்லை?” - கே.எஸ்.அழகிரி

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

திருநெல்வேலியில் நடைபெறவுள்ள சோனியா காந்தி, காமராசர் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``பிரதமர் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் டீசல், பெட்ரோல், சமையால் எரிவாயு சிலிண்டரின் விலை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மோடி அரசின் மிக மோசமான செயல்பாடுகளில் அதுவும் ஒன்று. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது உலகச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 108 டாலராக இருந்தது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ஆனால், 70 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை விற்றார். சமையல் எரிவாயு சிலிண்டரை 400 ரூபாய்க்கு விற்றார். அதன் மீது போடப்பட்ட வரிவிதிப்பைக் குறைத்தார். ஆனால், தற்போதைய மோடி அரசு, கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 27 லட்சம் கோடி ரூபாயை அந்தப் பொருள்களின் மீது வரியாக விதித்திருக்கிறது. அந்த வரிவிதிப்புதான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையேற்றத்துக்குக் காரணமாக உள்ளது. ராமராஜ்யம் எனச் சொல்லக்கூடிய நேபாளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சீதைக்குச் சொந்தமான பர்மாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ராவணனுக்குச் சொந்தமான இலங்கையில் 59 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மோடி ஒரு லிட்டர் பெட்ரோலை 100 ரூபாய்க்கு விற்கிறார். அந்த நாடுகளால் முடிகிறது. இந்தியாவால் முடியவில்லை என்றால் எப்படி? அன்று மன்மோகன் சிங்கால் முடிந்தது ஏன் இன்று மோடியால் முடியவில்லை? மோடியின் பொருளாதாரக் கொள்கையானது தவறானது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அனைத்துப் பொருள்களின் விலையும் உயரும் என்பதால்தான் நிறைய சிக்கல்கள் இருந்தாலும் அவற்றின் விலையை ஏறாமல் மன்மோகன்சிங் பார்த்துக் கொண்டார். மக்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். மோடியின் பொருளாதாரக் கொள்கை இப்படியேச் சென்றால், இந்தியாவின் வரும்காலம் மிகவும் மோசமானதாக இருக்கும். லாக்கப் டெத்தில் இரண்டு வகைகள் உண்டு. இதற்கு முன்பு இருந்த அரசு, லாக்கப்டெத்தை நியாயப்படுத்த முயற்சித்தது. தற்போதைய தி.மு.க அரசு, லாக்கப் டெத் நடந்தால் அதை கண்டிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரண்டு போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் முதல்வர் பேசியபோது கூட, `சிறந்த காவல்துறை அதிகாரிகளை மட்டும்தான் தமிழக அரசு பாராட்டும், பாதுகாக்கும். அதே நேரத்தில், தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்காது. எனவே காவல்துறையினர் தவறு செய்யாமல் சரியாக நடக்க வேண்டும்' எனக் கூறியிருக்கிறார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

என்னைப் பொறுத்தவரையில் அரசின் போக்கு, முதல்வரின் பேச்சு சரியானதுதான். திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கல்குவாரி விபத்து கொடூரமானது. இதுபோன்ற கல்குவாரிகளில் எப்போதுமே ஆய்வு உண்டு. ஆனால் ஆய்வு செய்ய வேண்டிய சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அதை சரியாகச் செய்வதில்லை. முறையாக ஆய்வு செய்யப்பட்டிருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது. அதிகாரிகள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism