Published:Updated:

"பாலியல் குற்றவாளிகளுக்குப் பரிவு காட்டும் மோடி அரசுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும்"- கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

``பில்கிஸ் பானோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சார்பு அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே இத்தகைய சலுகை வழங்கப்பட்டிருக்கிறது." - கே.எஸ்.அழகிரி

"பாலியல் குற்றவாளிகளுக்குப் பரிவு காட்டும் மோடி அரசுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும்"- கே.எஸ்.அழகிரி

``பில்கிஸ் பானோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சார்பு அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே இத்தகைய சலுகை வழங்கப்பட்டிருக்கிறது." - கே.எஸ்.அழகிரி

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்திருப்பது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை நாடே கோலாகலமாக கொண்டாடிக்கொண்டிருக்கிற நேரத்தில், பில்கிஸ் பானோ பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டவர்களை குஜராத் மாநில பா.ஜ.க அரசு விடுதலை செய்திருக்கிறது.

இது இந்திய வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளையும் சிறைச்சாலைக்கு வெளியே பா.ஜ.க-வினர் மாலை அணிவித்து மிகப்பெரிய வரவேற்பு அளித்ததைவிடக் கொடுமையான நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது.

பில்கிஸ் பானோ - Bilkis Bano
பில்கிஸ் பானோ - Bilkis Bano

இந்த விவகாரத்தில் நீதி கேட்டுப் போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். செய்த குற்றத்துக்காக நீதிமன்றங்களாலேயே தண்டிக்கப்பட்டவர்களை குஜராத் பா.ஜ.க அரசு விடுதலை செய்திருக்கிறது. பில்கிஸ் பானோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சார்பு அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே இத்தகைய சலுகை வழங்கப்பட்டிருக்கிறது.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்டபோது, முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, இன்று இந்தியாவின் பிரதமராகவும், மாநில அமைச்சராக இருந்த அமித் ஷா இன்று மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்கள். அன்று நடைபெற்ற படுகொலைக்கு இன்று நீதி கிடைக்கவில்லை. பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமைசெய்து ஏழு பேரைப் படுகொலை செய்தவர்களை நீதிமன்றம் தண்டித்த பிறகும், கருணை காட்டி தண்டனைக் குறைப்பு செய்வதைவிட ஜனநாயக சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் வன்கொடுமை குற்றத்தைச் செய்தவர்களுக்குப் பரிவு காட்டும் மோடி அரசுக்கு உரிய பாடத்தைப் புகட்டவேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.