Published:Updated:

தி.மலை: ``எட்டுவழிச் சாலை அமைப்பதாக அறிவித்தால், நாங்கள் எதிர்ப்போம்" - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

"பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் ராம ராஜ்யம் நடக்கிறது... இங்கு மட்டும்தான் ராவண ராஜ்யமா..?" - கே.எஸ்.அழகிரி.

தி.மலை: ``எட்டுவழிச் சாலை அமைப்பதாக அறிவித்தால், நாங்கள் எதிர்ப்போம்" - கே.எஸ்.அழகிரி

"பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் ராம ராஜ்யம் நடக்கிறது... இங்கு மட்டும்தான் ராவண ராஜ்யமா..?" - கே.எஸ்.அழகிரி.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

திருவண்ணாமலையில் நேற்று (30.08.2022) இரவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, "எங்களின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். வரும் 7-ம் தேதி கன்னியாகுமரியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த நடைப்பயணம்... இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக, மக்களைப் பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் தத்துவத்துக்கு எதிராக, பொருளாதாரச் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்காக, மோடி அவர்கள் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் கொடுப்பதாகச் சொன்ன 15 லட்சம் ரூபாய் எங்கே எனக் கேட்பதற்காக.

அந்த நடைப்பயணத்துக்கு, எங்களுடைய தோழர்களை திரட்டுவதற்காக நாங்கள் இன்று திருவண்ணாமலை வந்திருக்கிரோம். கணியாமூர் தனியார் பள்ளிச் சிறுமி உயிரிழப்பு விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சிப்பதா, கூடாதா என்ற சட்டச் சிக்கல் இருக்கிறது. ஆனால், எனக்குள் இருக்கின்ற ஓர் ஐயத்தை சொல்ல விரும்புகிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

கணியாமூர் சிறுமியின் உயிரிழப்பு விவகாரத்தில், தமிழகத்திலுள்ள எல்லா அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவிட்டனர். ஆனால், கருத்து கந்தசாமி மாதிரி எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லக்கூடிய பாஜக-வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை... இந்த மாணவியின் மரண விவகாரத்தில் மட்டும் கருத்து கூறாமல் இருக்கிறார். ஏன் கருத்தோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை... நீதிமன்றம் வரை ஏன் செல்லவில்லை... இதில் பாஜக ஆர்வம் காட்டாத மர்மமென்ன..?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எங்களுடைய மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இந்தியாவில் ஜி.டி.பி 9.2 சதவிகிதமாக இருந்தது. இது உலகப் பொருளாதார அமைப்புகள் சொன்ன ஒரு புள்ளிவிவரம். இன்று பாஜக ஆட்சியில் 7 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கிறது. அப்படியென்றால் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறதா... விழுந்திருக்கிறதா... இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகக் கடுமையாகக் குறைந்திருக்கிறது. அதனுடைய பொருள், இந்த நாட்டின் பொருளாதாரம் மோடி ஆட்சியில் விழுந்துவிட்டது என்பதுதான்.

மோடி - ராகுல்
மோடி - ராகுல்

சமீபகாலமாக இந்தியா முழுவதும் ரெய்டு நடக்கிறது. அதாவது, எங்கெல்லாம் எதிர்க்கட்சி ஆட்சி செய்கிறதோ... அங்கெல்லாம் சென்று இந்தச் சோதனையைச் செய்கிறார்கள். பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் இந்தச் சோதனை நடக்கவில்லையே ஏன்... இதுதான் என்னுடைய சின்னச் சந்தேகம். கெஜ்ரிவால், சிவசேனா, மம்தா பானர்ஜி அரசாங்கத்தில்தான் தவறு நடக்கிறதா... பாஜக ஆளும் மாநிலத்தில் தவறே நடப்பதில்லையா... இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், விசாரணை அமைப்புகளை ஏவல் நாய்களைப்போல அவிழ்த்துவிடுகிறார்கள். எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை வீழ்த்தப் பார்க்கிறார்கள்.

ஜனநாயகரீதியாக மக்கள் வாக்களித்து, வெற்றிபெற்று ஆளுகின்ற மாநிலங்கள், எதிர்க்கட்சியினர் ஆளுகின்ற மாநிலமாக இருந்தால்... அது சர்வாதிகாரமாக வீழ்த்தப்படுகிறது. அதை இந்திய மக்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவற்றை விளக்குவதற்காகத்தான் ராகுல் காந்தி அவர்களின் நடைப்பயணம். வரி வசூல் செய்வது தவறில்லை, தவறு செய்பவர்களிடம் சோதனை செய்வதும் தவறில்லை, அது இயல்பானது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ஆனால், அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படுகிற சோதனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே சோதனை பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், நம்புவார்கள். ஆனால், அங்கு மட்டும் ராமராஜ்யம் நடக்கிறது... இங்கு மட்டும்தான் ராவண ராஜ்யமா... எனவே, மக்கள் அதற்கு நல்ல பதில் சொல்வார்கள். எட்டுவழிச் சாலை அமைப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தால், நாங்கள் அதை எதிர்ப்போம்" என்றார்.