Published:Updated:

நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றிய சுயேச்சை; குமாரபாளையத்தில் திமுக, அதிமுக-வுக்கு `ஷாக்!'

குமாரபாளையம் நகராட்சி ஷாக்

திமுக, அதிமுக என இரண்டு பிரதான கட்சிகளுக்கும் டஃப் கொடுத்து, குமாரபாளையம் நகராட்சியைக் கைப்பற்றி அதன் தலைவராகியிருக்கிறார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர்.

நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றிய சுயேச்சை; குமாரபாளையத்தில் திமுக, அதிமுக-வுக்கு `ஷாக்!'

திமுக, அதிமுக என இரண்டு பிரதான கட்சிகளுக்கும் டஃப் கொடுத்து, குமாரபாளையம் நகராட்சியைக் கைப்பற்றி அதன் தலைவராகியிருக்கிறார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர்.

Published:Updated:
குமாரபாளையம் நகராட்சி ஷாக்

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறது குமாரபாளையம் நகராட்சி. இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, குமாரபாளையம் நகராட்சியைக் கைப்பற்ற தீவிரம்காட்டிவந்தார். அதேபோல, நாமக்கல் தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளரான கே.எஸ்.மூர்த்தி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பரமத்திவேலூர் தொகுதியில் நின்று தோல்வியைத் தழுவினார். அதனால், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குமாரபாளையம் நகராட்சியைக் கைப்பற்றுவது அவருக்கு வாழ்வா, சாவா பிரச்னையாக மாறியிருப்பதாக தி.மு.க-வினர் மத்தியில் பேசப்பட்டது. இந்தச் சூழலில், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், தி.மு.க 14 இடங்களையும், அ.தி.மு.க 10 இடங்களையும், சுயேச்சைகள் 9 இடங்களையும் கைப்பற்றினர். இதனால், தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை இல்லாததால், இரண்டு தரப்பும் சுயேச்சைகளிடம் 'குதிரைப் பேரம்' நடத்தினர்.

கவுன்சிலர்கள்
கவுன்சிலர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், அவர்கள் எதிர்பாராதவிதமாக 31-வது வார்டில் நின்று வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணன் என்பவர், 7 தி.மு.க, 7 சுயேச்சைகள், 3 அ.தி.மு.க கவுன்சிலர்களை 'வளைத்து' அவர்களை ஏற்காடு மற்றும் சென்னையில் கொண்டுபோய் தனது பாதுகாப்பில் வைத்துக்கொண்டார். விஜய்கண்ணன், கவுன்சிலர்களுக்கு ரூ. 25 முதல் ரூ.50 லட்சம் வரை கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. ரியல் எஸ்டேட் அதிபரான விஜய்கண்ணன், தங்கமணி அமைச்சராக இருந்தபோது, அவரால் தொழில்ரீதியாக பாதிக்கப்பட்டாராம். அதனால், பா.ஜ.க-விலிருந்து தி.மு.க வந்த விஜய்கண்ணனுக்கு, தி.மு.க-விலும் ஒரு நகர நிர்வாகி குடைச்சல் கொடுத்தாராம். அந்தக் கோபத்தைத்தான் சுயேச்சையாக நின்று, கவுன்சிலர்களை வளைத்து, அ.தி.மு.க தங்கமணி மற்றும் தி.மு.க மீது இப்படிக் காட்டினாராம்.

 தங்கமணி
தங்கமணி

இதற்கிடையில், 'குமாரபாளையம் நகராட்சியை யாராவது ஒரு கட்சி கைப்பற்ற வேண்டும்' என்று நினைத்த தங்கமணி, தி.மு.க கே.எஸ்.மூர்த்தியிடம், 'விஜய்கண்ணன் அழைத்துப்போன மூன்று அ.தி.மு.க கவுன்சிலர்களையும் அழைத்துவந்து, அவர்களோடு சேர்த்து 10 அ.தி.மு.க கவுன்சிலர்களையும் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வைக்கிறேன். தலைவர் பதவியை நீங்க வெச்சுக்குங்க. துணைத் தலைவர் பதவியை எங்களுக்குத் தாங்க' என்று 'ரகசிய உடன்படிக்கை' செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், தங்கமணி மற்றும் தி.மு.க-வினரால், விஜய்கண்னன் வசம் இருந்த கவுன்சிலர்களை நெருங்கக்கூட முடியவில்லையாம்.

அதேநேரம், விஜய்கண்ணன் கே.எஸ்.மூர்த்தி தரப்பிடம், 'எல்லா கவுன்சிலர்களையும் ஆதரவு தர வைக்கிறேன். என்னை நகராட்சித் தலைவர் வேட்பாளராக அறிவியுங்க' என்று கேட்டாராம். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த கே.எஸ்.மூர்த்தி, சத்தியசீலன் என்பவரை தலைவர் வேட்பாளராக அறிவித்தார். இந்த நிலையில், விஜய்கண்ணன் தரப்பிலிருந்த தி.மு.க கவுன்சிலர்கள், '4-ம் தேதி வரை எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்' என்று நாமக்கல் ஆட்சியர் மற்றும் எஸ்.பி-யிடம் மனு கொடுத்தனர். தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினரால் பிரச்னை வரக் கூடாது என்பதற்காக, கவுன்சிலர்களை வைத்து இப்படிப் புகார் கொடுக்கவைத்ததாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், `தி.மு.க கவுன்சிலர்கள், தி.மு.க தலைமையால் அறிவிக்கப்படும் வேட்பாளருக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இல்லையென்றால், கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்' என்று அறிக்கைவிட்டார். ஆனால், அதற்கெல்லாம் அசராத தி.மு.க கவுன்சிலர்கள், விஜய்கண்ணன் மற்றும் மற்ற கவுன்சிலர்களோடு வந்து, 2-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அதன் பிறகு, இன்று தன்னோடு சேர்த்து தனக்கு 18 வாக்குகள் கிடைக்க, குமாரபாளையம் நகராட்சித் தலைவராகி, தங்கமணி, கே.எஸ்.மூர்த்திக்கு விஜய்கண்ணன் 'கடுக்காய்' கொடுத்திருக்கிறார். அதேபோல, விஜய்கண்ணனுக்கு ஆதரவு தெரிவித்த 25-வது வார்டு தி.மு.க கவுன்சிலர், துணைத் தலைவராகியிருக்கிறார்.

தி.மு.க வேட்பாளர் சத்தியசீலனுக்கு 15 வாக்குகள் கிடைத்தன. இதனால், 'தனது தொகுதி தலைமையிடமான குமாரபாளையம் நகராட்சியைக் கைப்பற்ற முடியவில்லையே' என தங்கமணியும், 'ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளராக இருந்தும், தன்னால் இந்த நகராட்சியைக் கைப்பற்ற வைக்க முடியவில்லையே... அதைவிட, தி.மு.க கவுன்சிலர்களைக்கூடப் பாதுகாக்க முடியவில்லையே...' என்று கே.எஸ்.மூர்த்தியும் அங்கலாய்த்து வருகிறார்கள். இதனால், கே.எஸ்.மூர்த்தியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கே.எஸ்.மூர்த்தி (தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்)
கே.எஸ்.மூர்த்தி (தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்)

இந்த நிலையில், இது குறித்து சிலரிடம் பேசினோம். ``தங்கமணி மற்றும் தி.மு.க நகரச் செயலாளர் செல்வம், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி மீதுள்ள கோபத்தில், இப்படி கவுன்சிலர்களை வளைத்து, சுயேச்சைத் தலைவராக குமாரபாளையம் நகராட்சியை விஜய்கண்ணன் கைப்பற்றியுள்ளார். ஆனால், ஆளுங்கட்சியை எதிர்த்து சுயேச்சைஹ் தலைவராக எவ்வளவு காலம் செயல்பட்டுவிட முடியும் என்று அவர் நினைக்கிறார்... அதோடு, ஆளுங்கட்சி பவரை வைத்து கவுன்சிலர்களை மிரட்டி, அவர்கள் மூலமாகத் தன்மீது நம்பிக்கையில்ல தீர்மானம் கொண்டு வந்து, தனது பதவியை காலி செய்துவிடுவார்கள் என்றும் அஞ்சுகிறார். அதனால்தான், தேர்தலுக்குச் செலவு செய்தது, கவுன்சிலர்களுக்குக் கொடுத்தது என எல்லாவற்றையும் கேட்டு வாங்குவதோடு, நகராட்சித் தலைவர் பதவியையும் தக்கவைத்தபடி தி.மு.க-வுக்கு விரைவில் வருவார் பாருங்கள்.

அதோடு, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திலுள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகள், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்கள் என தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. ஆனால், கே.எஸ்.மூர்த்தி மாவட்டச் செயலாளராக உள்ள நாமக்கல் மேற்கு மாவட்டத்தில், தி.மு.க தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துவருகிறது. அதனால், கே.எஸ்.மூர்த்தி வசம் இருக்கும் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்படலாம். அந்தப் பதவிக்கும் சேர்த்தே விஜய்கண்ணன் காய்நகர்த்துவார்" என்றார்கள்.

விஜய்கண்ணன் (குமாரபாளையம் நகராட்சி தலைவர்)
விஜய்கண்ணன் (குமாரபாளையம் நகராட்சி தலைவர்)

அவர்கள் சொன்னதைப்போலவே, பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜய்கண்ணன், ``எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நன்றி. தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவர் ஆசி பெற்று தி.மு.க-வில் இணைந்து, எனக்கு வாக்களித்த சுயேச்சை உறுப்பினர்களையும் தி.மு.க-வில் இணைத்து, மாநிலத்திலேயே சிறப்பான நகராட்சியாக குமாரபாளையத்தை மாற்றிக்காட்டுவேன்" என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism