Election bannerElection banner
Published:Updated:

குஷ்பு: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

குஷ்பு
குஷ்பு

தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே பாஜகவில் இணைந்த செல்வம், அப்போதே, 2021 தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதி தனக்குத் தரப்பட வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தார். அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தித்தான் இந்தத் தொகுதியை குஷ்புவுக்கு வழங்கியது பாஜக.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே சென்னை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவதற்கான திட்டமிடலுடன், தொகுதியில் களப்பணியைத் தொடங்கி இருந்தார் நடிகை குஷ்பு. ஆனால், சென்னையில் பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதி இரண்டே இரண்டுதான் என்பதால், அந்த இரண்டையும் பெற கட்சியினரிடையே கடும் முட்டல் மோதல். இதில் குஷ்பு எதிர்பார்த்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி கையை விட்டுப்போக, ஒரு வழியாக தனது டெல்லி லாபி மூலம் ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கினார் குஷ்பு. ஆயிரம் விளக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 9 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 1989, 1996, 2001 மற்றும் 2006 ஆம்ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்துதான் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.க.செல்வம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பா.வளர்மதியை 8,829 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். அந்தத் தேர்தலில் கு.க.செல்வத்துக்குக் கிடைத்த வாக்குகள் 61,726.

குஷ்பு
குஷ்பு

தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே பாஜகவில் இணைந்த செல்வம், அப்போதே, 2021 தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதி தனக்குத் தரப்பட வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தார். அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தித்தான் இந்தத் தொகுதியை குஷ்புவுக்கு வழங்கியது பாஜக. இந்தத் தேர்தலில் திமுகவின் வேட்பாளராக டாக்டர் எழிலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஏ.ஜே.செரின், மக்கள் நீதி மய்யம் சார்பில் கே.எம்.செரீப், அமமுக சார்பில் என்.வைத்தியநாதன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இருப்பினும் டாக்டர் எழிலன் மூலம் கடுமையான போட்டியை எதிர்கொண்டார் குஷ்பு. இருவருமே தேர்தலுக்குப் புதுசு என்றாலும், இந்தத் தொகுதி திமுக அதிக முறை வெற்றி பெற்ற தொகுதி என்பதும், எழிலன் டாக்டர் மற்றும் திமுக தலைமைக்கு நெருக்கமானவர் என்பதும் குஷ்புவுக்கு பாதகமான அம்சமாக தேர்தல் நேரத்தில் பார்க்கப்பட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு