Published:Updated:

``தைரியமாகப் பேசுகிறார் அண்ணாமலை; சர்ச்சையாகத்தான் செய்யும்..!" - குஷ்பு

குஷ்பு

``எல்லாரும் இதுவரை பம்மிக்கொண்டு, சொல்வதற்கெல்லாம் ஆம் என கைகட்டிக்கொண்டிருந்தனர். அண்ணாமலை துணிச்சலான தலைவர்." - குஷ்பு

``தைரியமாகப் பேசுகிறார் அண்ணாமலை; சர்ச்சையாகத்தான் செய்யும்..!" - குஷ்பு

``எல்லாரும் இதுவரை பம்மிக்கொண்டு, சொல்வதற்கெல்லாம் ஆம் என கைகட்டிக்கொண்டிருந்தனர். அண்ணாமலை துணிச்சலான தலைவர்." - குஷ்பு

Published:Updated:
குஷ்பு

கோவை, வெள்ளலூர் அருகே பா.ஜ.க சார்பில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் நடிகையும், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய குஷ்பு, ``பொங்கல் பண்டிகையில் நம் பாரம்பர்யம், கலாசாரம் எல்லாம் கலந்திருக்கிறது. பொங்கல் பரிசாக ரூ.1,000, ஒரு கரும்பு கொடுப்பதற்கு தமிழக அரசுக்கு கொஞ்சம்கூட வெட்கம் இல்லை.

குஷ்பு
குஷ்பு

கலைஞர் இருக்கும்போது எவ்வளவு செய்திருக்கிறார் எனப் பார்த்திருக்கிறோம். பிரதமர் மோடி ஒவ்வொரு மேடையிலும் தமிழ் குறித்தும், தமிழ் கலாசாரம் குறித்தும் பேசி வருகிறார். தமிழ் கலாசாரத்தைப் பாதுகாக்கிறோம் எனச் சொல்லிவிட்டு இந்த ஆயிரம் ரூபாயைக் கொடுப்பதற்கு, கொடுக்காமலேயே இருக்கலாம்.

சுயமரியாதை ஆட்சி என தி.மு.க சொல்லும்போது, சுயமரியாதையோடு வாழும் ஒவ்வொரு தமிழரும் இதை வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். ஒருவர் சொல்வதால் பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றாகிவிடாது. எல்லா பெண்களும் வெளியே போகவில்லை. நானும் கட்சியில்தானே இருக்கிறேன்.

குஷ்பு
குஷ்பு

தி.மு.க-வில் எனக்கு எதிராகத்தான் நடந்துகொண்டனர். ஆனால், எனக்கு பா.ஜ.க ஆதரவாக நின்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை போராடினார். இதன் விளைவாகச் சம்பந்தப்பட்ட நபர் தன் கைப்பட மன்னிப்புக் கடிதம் கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாடு என்பதை  தமிழகம், தமிழ்நாடு என எப்படி அழைத்தாலும் தவறில்லை. எப்படி அழைத்தாலும் இது இந்தியாவின் அங்கம்தான். ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்துகொள்வது, கமல்ஹாசன் கட்சியின் உரிமை. பொங்கலுக்கு துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்கும் போகவில்லை. வீட்டில்தான் இருப்பேன்.

அண்ணாமலை
அண்ணாமலை

எல்லோரும் இதுவரை பம்மிக்கொண்டு, சொல்வதற்கெல்லாம் ஆம் எனக் கைகட்டிக்கொண்டிருந்தனர். அண்ணாமலை துணிச்சலான தலைவர். நியாயமாகத் தைரியமாக, தெளிவாகப் பேசுகிறார் என்பதால் சர்ச்சையாகத்தான் செய்யும்.  மும்பையில் பிறந்தாலும் நான் தமிழச்சி” என்றார்.