Published:Updated:

`கொல்லப்பட்ட மகன்; வெற்றிபெற்று பதவியேற்பில் கண்ணீர்விட்ட தாய்' - கலங்கிய கவுன்சிலர்கள்!

பெண் கவுன்சிலர் பேச்சியம்மாள்

பேச்சியம்மாள் உறுதிமொழி படிவத்தை வாசித்தபோது தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறினார். வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது அரங்கமே அமைதியாக இருந்தது.

`கொல்லப்பட்ட மகன்; வெற்றிபெற்று பதவியேற்பில் கண்ணீர்விட்ட தாய்' - கலங்கிய கவுன்சிலர்கள்!

பேச்சியம்மாள் உறுதிமொழி படிவத்தை வாசித்தபோது தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறினார். வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது அரங்கமே அமைதியாக இருந்தது.

Published:Updated:
பெண் கவுன்சிலர் பேச்சியம்மாள்

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க 44 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மூன்று இடங்களிலும் ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய தலா ஒரு இடங்களும் என தி.மு.க கூட்டணி 50 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க-வுக்கு நான்கு வார்டுகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அதேபோல, ஒரு வார்டு சுயேச்சை வசமானது.

நெல்லை மாநகராட்சி
நெல்லை மாநகராட்சி

தி.மு.க-வுக்கு பெரும்பான்மை கிடைத்து விட்ட போதிலும், அந்தக் கட்சியின் சார்பாக மேயர், துணை மேயர் பொறுப்புக்கு யார் வேட்பாளர் என்பதை கட்சித் தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. அதற்கு முன்பாக கவுன்சிலர்களை யாராவது கடத்திவிடக் கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் சார்பாக தி.மு.க-வின் பெண் கவுன்சிலர் உள்ளிட்ட அனைவரும் குடும்பத்துடன் வெளியூர்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொறுப்பேற்பதற்காக வேன் மூலமாக அழைத்து வரப்பட்ட கவுன்சிலர்கள், பொறுப்பேற்றதும் மீண்டும் வேன் மூலமாக குற்றாலம் வழியாக கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கவுன்சிலர்கள் பொறுப்பேற்றபோது மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் அரங்கத்தில் இருந்தார். அவருக்கு கவுன்சிலர்கள் பலரும் நன்றி தெரிவித்தனர்.

பொறுப்பேற்ற பெண் கவுன்சிலர் பேச்சியம்மாள்
பொறுப்பேற்ற பெண் கவுன்சிலர் பேச்சியம்மாள்

35-வது வார்டு கவுன்சிலர் பேச்சியம்மாள் பொறுப்பேற்றபோது கட்சித் தலைவர் ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் உள்ளிட்ட பலரது பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டார். உறுதிமொழி படிவத்தை வாசித்தபோது தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறினார். வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது அரங்கமே அமைதியாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவுன்சிலர் பேச்சியம்மாளின் மகன் பொன்னுதாஸ், 35-வது வார்டு தி.மு.க செயலாளராக இருந்தார். அந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தன் தாய்க்கு சீட் கேட்டிருந்தார். ஆனால் அதே வார்டில் சீட் கேட்ட அருண் பிரவீன் என்ற வழக்கறிஞர், தன் தாய்க்கு சீட் கிடைக்காது என்பதை அறிந்ததும் ஆவேசமாகி பொன்னுதாஸை வெட்டிக் கொன்றார்.

கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்படும் கவுன்சிலர்கள்
கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்படும் கவுன்சிலர்கள்

தேர்தல் நேரத்தில் தன் மகன் கொல்லப்பட்ட சோகத்துக்கு மத்தியிலும் அவர் விருப்பப்பட்டபடி தேர்தல் களத்தில் இறங்கிய பேச்சியம்மாள் பிரசாரத்துக்குக் கூட செல்லவில்லை. ஆனாலும் அவர் அமோக வெற்றி பெற்றார். அதனால் இன்று அவர் பொறுப்பேற்றபோது கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

பொறுப்பேற்ற பெண் கவுன்சிலர் பேச்சியம்மாள் பேசுகையில், "என் மகன் எதிர்பார்த்ததை விடவும் வாக்களித்த வார்டு மக்களுக்காக சிறப்பாகச் செயல்படுவேன்" என்று சொன்னவாறு கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism