Published:Updated:

``அப்பாவுக்கு கிட்னி அளிப்பதில் பெருமைக் கொள்கிறேன்!" - லாலு பிரசாத் யாதவ் குறித்து மகள் உருக்கம்

மகள் ரோகினி ஆச்சார்யாவுடன் லாலு பிரசாத் யாதவ் ( ட்விட்டர் )

சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகள் ரோகினி ஆச்சார்யா, தன் தந்தைக்கு சிறுநீரகம் (kidney) அளிக்க முடிவு செய்திருக்கிறார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை நிறுவியவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைக் கைதியான லாலு பிரசாத் யாதவ் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்
ட்விட்டர்

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை முடித்துவிட்டு, கடந்த மாதம் நாடுதிரும்பிய லாலு பிரசாத் யாதவுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (kidney transplant) செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகள் ரோகினி ஆச்சார்யா, தன் தந்தைக்கு சிறுநீரகம் (kidney) அளிக்க முடிவு செய்திருக்கிறார்.

மகள் ரோகினி ஆச்சார்யாவுடன் லாலு பிரசாத் யாதவ்
மகள் ரோகினி ஆச்சார்யாவுடன் லாலு பிரசாத் யாதவ்
ட்விட்டர்

இது குறித்து ரோகினி ஆச்சார்யா , ``ஆம், அது உண்மைதான். அப்பாவுக்கு என்னுடைய சிறுநீரகத்தை(kidney) அளிக்கப் போகிறேன். அதில் நான் பெருமைகொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.இதனால், இந்த மாதம் இறுதியில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் கடந்த மாதம் ரோகினி ஆச்சார்யா தன் ட்விட்டர் பக்கத்தில், ``இந்த நாட்டுக்கு உங்கள் இருப்பு தேவை. அதன்மூலம் நாடு கொடுங்கோல் சிந்தனையை எதிர்த்துப் போராட முடியும்" என்று தன் தந்தை குறித்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.