Published:Updated:

``பெண் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அமைதி காக்கிறேன்..!"- விவாகரத்து விவகாரத்தில் லாலு பிரசாத் மகன்

தேஜ் பிரதாப் யாதவ் ( ட்விட்டர் )

``நானும், என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரால் கடுமையாக துன்புறுத்தப்பட்டிருக்கிறோம்." - தேஜ் பிரதாப் யாதவ்

``பெண் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அமைதி காக்கிறேன்..!"- விவாகரத்து விவகாரத்தில் லாலு பிரசாத் மகன்

``நானும், என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரால் கடுமையாக துன்புறுத்தப்பட்டிருக்கிறோம்." - தேஜ் பிரதாப் யாதவ்

Published:Updated:
தேஜ் பிரதாப் யாதவ் ( ட்விட்டர் )

மறைந்த பீகார் முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராய்க்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் இருவரும் விவாகரத்து கோரி பிகார் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதையடுத்து, ஐஸ்வர்யா ராயின் தந்தை சந்திரிகா ராய், ``இந்த அவமானத்துக்கு நான் அரசியல் ரீதியாகப் பழிவாங்குவேன்" என சபதம் செய்துவிட்டு, அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியில் இணைந்தார். ஆனால், அதன்பிறகு 2020-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுவிட்டார்.

விவாகரத்து
விவாகரத்து

அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராயின் தந்தை சந்திரிகா ராய், ``லாலு பிரசாத் யாதவும், அவரின் நெருங்கிய கட்சி உதவியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என்னை அவ்வப்போது காயப்படுத்துகிறார்கள். மேலும், என் மகள் விவாகரத்து வழக்கில் ஆர்.எஸ்.எஸ் தரப்பு மூலம் என்னைக் கேவலப்படுத்த சதி செய்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``நானும், என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரால் கடுமையாக துன்புறுத்தப்பட்டிருக்கிறோம். எங்களை உடல் ரீதியாகவும், வாய்மொழியாகவும் துன்புறுத்தினார். அதை நிரூபிக்க எண்ணற்ற வீடியோக்களும், பிற ஆதாரங்களும் என்னிடமிருக்கின்றன. அவற்றை என்னால் பொதுவெளிக்கு கொண்டுவர முடியும். ஆனால் இது ஒரு இளம்பெண் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் நான் அமைதி காக்கிறேன்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!