Published:Updated:

நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உதவியாளர் கைது - சிபிஐ நடவடிக்கை

லாலு பிரசாத் யாதவ்

மாற்றுத் திறனாளிகளின் சொத்தை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு மாற்றிக் கொண்டதாக சி.பி.ஐ குற்றம் சாட்டியது.

நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உதவியாளர் கைது - சிபிஐ நடவடிக்கை

மாற்றுத் திறனாளிகளின் சொத்தை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு மாற்றிக் கொண்டதாக சி.பி.ஐ குற்றம் சாட்டியது.

Published:Updated:
லாலு பிரசாத் யாதவ்

முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தாண்டின் தொடக்கத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இந்த மாட்டு தீவன ஊழல் வழக்கு லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான ஐந்தாவது வழக்கு. இதற்கு முன்னதாக தும்கா, தியோகர், சாய்பாசா கருவூலங்கள் தொடர்பான நான்கு வழக்குகளில் அவர் முன்பு ஜாமீன் பெற்றிருந்தார்.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

இந்த நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் லாலு பிரசாத் யாதவ் நில மோசடி ஊழல் வழக்கில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விசாரணைக்கு லாலு பிரசாத் யாதவ்-வின் உதவியாளர் போலா யாதவ் கைது செய்யப்பட்ட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக வெளியான செய்தியில், 2004 - 2009 காலகட்டத்தில் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வேயின் வெவ்வேறு மண்டலங்களில் `டி’ பதவிக்கு மாற்றுத் திறனாளிகளை நியமிக்க, அவர்களிடமிருந்து நிலச் சொத்தை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு மாற்றிக் கொண்டதாக சி.பி.ஐ குற்றம் சாட்டியது.

போலா யதவ்
போலா யதவ்
ட்விட்டர்

இது தொடர்பாக ஏழு பேரிடம் நிலம் பெறப்பட்டுள்ளதாக சி.பி.ஐ கண்டறிந்திருக்கிறது. எனவே, இது தொடர்பான விசாரணைக்காக நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளரான போலா யாதவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று கைது செய்திருக்கிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பீகாரின் தர்பங்கா மற்றும் பாட்னாவில் பல இடங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது.