Published:Updated:

முதல்வரின் விழா மேடைக்குத் தீவைப்பு; 144 தடை உத்தரவு, இணைய முடக்கம்... மணிப்பூரில் பதற்றம்!

விழா மேடைக்குத் தீவைப்பு ( ட்விட்டர் )

அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, நேற்று இரவு விழா மேடையைச் சேதப்படுத்தி தீவைத்துவிட்டுத் தப்பியிருக்கிறது. இதனால், முதல்வரின் பயணம் ரத்துசெய்யப்பட்டது.

Published:Updated:

முதல்வரின் விழா மேடைக்குத் தீவைப்பு; 144 தடை உத்தரவு, இணைய முடக்கம்... மணிப்பூரில் பதற்றம்!

அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, நேற்று இரவு விழா மேடையைச் சேதப்படுத்தி தீவைத்துவிட்டுத் தப்பியிருக்கிறது. இதனால், முதல்வரின் பயணம் ரத்துசெய்யப்பட்டது.

விழா மேடைக்குத் தீவைப்பு ( ட்விட்டர் )

மணிப்பூர் மாநிலத்தில், பா.ஜ.க அரசு பாதுகாக்கப்பட்ட பகுதி (Reserved Area), பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற பகுதிகளைக் கணக்கெடுக்கப்போவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் இதர பழங்குடியினக் குடியேற்றவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அரசுக்குப் பலமுறை பழங்குடியினர், பழங்குடியினத் தலைவர்கள் மனு அளித்தபோதிலும், அரசு அதைப் பொருட்படுத்தவோ, மக்கள் பிரச்னைக்குத் தீர்வு காண விருப்பம் காட்டவோ இல்லை எனப் பழங்குடியினத் தலைவர்களால் குற்றம்சாட்டப்படுகிறது.

தீவைப்பு
தீவைப்பு
ட்விட்டர்

இவர்களுக்கு குக்கி (Kuki) மாணவர் அமைப்பும் ஆதரவு தெரிவித்து, ``பழங்குடியினரை மாற்றாந்தாய்போல அரசு நடத்துகிறது. சட்டவிரோத கட்டுமானங்கள் எனக் கூறி மணிப்பூரிலுள்ள மூன்று தேவாலயங்களை அரசு இடித்திருக்கிறது. பழங்குடியின மக்களை, கிராமங்களிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றுவது உள்ளிட்ட பழங்குடியினரின் உரிமைகளை நசுக்கும் வேலைகளை நாங்கள் கண்டிக்கிறோம்" எனக் கூறியிருந்தது.

இந்த நிலையில், மணிப்பூர் பா.ஜ.க முதல்வர் பிரேன் சிங், சூராசந்த்பூர் மாவட்டத்துக்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலக் கணக்கெடுப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழங்குடிகள் மற்றும் பழங்குடியினத் தலைவர்கள் மன்றம் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பந்த் நடத்தியது. இந்த பந்த்துக்கு குக்கி மாணவர் அமைப்பும் ஆதரவு தெரிவித்திருந்தது.

முதல்வர் பிரேன் சிங்
முதல்வர் பிரேன் சிங்
ட்விட்டர்

இதற்கிடையில், சூராசந்த்பூர் மாவட்டத்தில் உடற்பயிற்சிக்கூடம் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றைத் திறந்துவைக்க மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் செல்லவிருந்தார். அவரின் வருகைக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, நேற்று இரவு விழா மேடையைச் சேதப்படுத்தி, தீவைத்துவிட்டுத் தப்பியிருக்கிறது. இதனால், முதல்வரின் பயணம் ரத்துசெய்யப்பட்டது. மேலும், அங்கு வன்முறை வெடித்ததால் பெரிய அளவில் மக்கள் கூடுவதற்கு தடைவிதித்து 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது; இணைய சேவையும் முடக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்துவருகிறது.