Published:Updated:

Tamil News Live Today: ``தேர்தல் மக்களுக்கானது... உங்களுக்கானது அல்ல!" - மோடியைச் சாடிய ராகுல்

ராகுல் காந்தி - மோடி
Live Update
ராகுல் காந்தி - மோடி

Tamil News Live Today: 01-05-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

01 May 2023 6 PM

``தேர்தல் மக்களுக்கானது... உங்களுக்கானது அல்ல!" - மோடியைச் சாடிய ராகுல்

Tamil News Live Today: ``தேர்தல் மக்களுக்கானது... உங்களுக்கானது அல்ல!" - மோடியைச் சாடிய ராகுல்
01 May 2023 4 PM

விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

விஷவாயு தொழிலாளர்கள் உயிரிழப்பு!
விஷவாயு தொழிலாளர்கள் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகேயுள்ள கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி இரண்டு தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். தனியார் பள்ளியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது இந்த விபரீதம் நடந்திருக்கிறது.

01 May 2023 4 PM

``போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது'' - ஓ.பி.எஸ்

Tamil News Live Today: ``தேர்தல் மக்களுக்கானது... உங்களுக்கானது அல்ல!" - மோடியைச் சாடிய ராகுல்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு இன்று முதல் கலைக்கப்படுகிறது. புதிய பொதுக்குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில், உண்மையான உறுப்பினர்களுக்கு, விரைவில் அடையாள அட்டைகள் வழங்கப்படும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

01 May 2023 3 PM

"எங்கள் முன்னோர்கள் எழுதாததையா கருணாநிதி எழுதிவிட்டார்?!” - சீமான் காட்டம்

Tamil News Live Today: ``தேர்தல் மக்களுக்கானது... உங்களுக்கானது அல்ல!" - மோடியைச் சாடிய ராகுல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``கடலுக்குள் பேனா சிலை வைப்பதுதான் உங்கள் பகுத்தறிவா... எங்கள் முன்னோர்கள் எழுதாததை, அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரின் பேனா எழுதாததையா கருணாநிதி எழுதிவிட்டார்... பேனா சிலை வைக்க ரூ.81 கோடி எங்கிருந்து வந்தது?'' என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

01 May 2023 3 PM

தமிழ்நாடு அரசின் சாதனைகள்; மே 7, 8, 9 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் வகையில், மே 7, 8, 9 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் எனும் தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

01 May 2023 1 PM

கொலைசெய்யப்பட்ட வி.ஏ.ஓ-வின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது!

Tamil News Live Today: ``தேர்தல் மக்களுக்கானது... உங்களுக்கானது அல்ல!" - மோடியைச் சாடிய ராகுல்

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த 25-ம் தேதி மணல் கொள்ளையரால் படுகொலைசெய்யப்பட்டார். அவரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், கனிமொழி எம்.பி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் லூர்து பிரான்சிஸின் இல்லத்துக்குச் சென்று ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை அவரின் மனைவி போனிஸ்ட்டாளிடம் வழங்கினர்.

01 May 2023 12 PM

சென்னையில் கோடை மழை... கிளிக்!

01 May 2023 11 AM

``30 வருடங்கள் எத்தனையோ கஷ்டங்களைச் சந்தித்து வந்திருக்கிறோம்'' - வைகோ

வைகோ - திருப்பூர் துரைசாமி
வைகோ - திருப்பூர் துரைசாமி

ம.தி.மு.க அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, வைகோவுக்கு கடிதம் எழுதிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ,``துரைசாமி இப்போது அறிக்கை கொடுப்பது நல்ல நோக்கத்திற்காகவா இருக்க முடியும். கட்சியை இணைத்துவிடலாம் எனக் கூறுகிறார்... கட்சியில் 99.9 சதவிகிதம் பேருக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. ஆனால், துரைசாமிக்கு இருக்கலாம். இதுதான் தமிழ்நாடு முழுவதுமுள்ள தொண்டர்களின் உணர்வு. 30 வருடங்கள் எத்தனையோ கஷ்டங்களைச் சந்தித்து வந்திருக்கிறோம். இன்னும் கஷ்டங்களைக் கடந்துபோவதற்கும் தயாராக இருக்கிறோம். ஜனநாயக முறைப்படி கட்சித் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது'' என்றார்.

01 May 2023 9 AM

``12 மணி நேர வேலை மசோதாவை தி.மு.க தொழிற்சங்கமே எதிர்த்ததைப் பாராட்டுகிறேன்” - முதல்வர் ஸ்டாலின்

தொழிலாளர் தினமான இன்று, சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவிலுள்ள நினைவுச்சின்னத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தி.மு.க தொழிற்சங்கமான தொ.மு.ச பேரவை சார்பில் மே தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், சிவப்பு நிற உடை அணிந்துவந்து மே தின பூங்காவில் மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``தி.மு.க அரசு கொண்டுவந்த 12 மணி நேர வேலை மசோதாவை தி.மு.க தொழிற்சங்கமே எதிர்த்ததைப் பாராட்டுகிறேன். தி.மு.க ஜனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு. விட்டுக்கொடுப்பதை என்றும் அவமானமாக நினைக்கவில்லை, அதைப் பெருமையாகவே கருதுகிறேன். 12 மணி நேர பணி சட்டத்தைத் திரும்பப் பெற்ற பிறகும் அது குறித்து அவதூறான தகவல்களைப் பரப்புகின்றனர்” என்றார்.