Published:Updated:

``சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு" - உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மோடி

மோடி, அமித் ஷா

``தீவிரவாத குற்றங்களைத் தடுப்பது மத்திய, மாநில அரசின் கூட்டுப் பொறுப்பு" - அமித் ஷா

``சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு" - உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மோடி

``தீவிரவாத குற்றங்களைத் தடுப்பது மத்திய, மாநில அரசின் கூட்டுப் பொறுப்பு" - அமித் ஷா

Published:Updated:
மோடி, அமித் ஷா

ஹரியானா மாநிலம், சூரஜ்கோட்டில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களின் கூட்டம் நேற்று முதல் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு சார்பாக சட்ட அமைச்சர் ரகுபதி இதில் கலந்துகொண்டார். இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தீவிரவாத குற்றங்களைத் தடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு. அதற்காக வரும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

அமித் ஷா
அமித் ஷா
ட்விட்டர்

மேலும், நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு எதிராகவும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதோடு, அரசு சாரா நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, "தேசத்தைக் கட்டமைப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம பொறுப்பு இருக்கிறது. சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு. அதேசமயம், இது தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

மோடி
மோடி
ட்விட்டர்

அவற்றை மேம்படுத்த அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு பேணி, அதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும். அதே போன்று நாடு முன்னேறும்போது, அதனுடைய வளர்ச்சிப் பலன்கள் அடிமட்டத்தில் இருக்கும் கடைசி குடிமகனுக்கும் சென்றடைவதை நாம் அனைவரும் உறுதிசெய்ய வேண்டும்" எனப் பேசினார்.

தமிழகத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடந்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வின் இந்தக் கருத்துகள் கவனம் பெற்றிருக்கின்றன. எனினும், இருவரின் கருத்துகளிலும் முரண் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.