Published:Updated:

ஜார்க்கண்ட்: முதல்வர்மீது ஊழல் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் கைது! - எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

முதல்வர்மீது குற்றம்சாட்டிய வழக்கறிஞர் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு அந்த மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்மீது ஊழல், சுரங்க முறைகேடுகள் மற்றும் பண மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டி, வழக்கறிஞர் ராஜீவ் குமார் என்பவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். அதைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகப் பதிலளித்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ``இந்தக் குற்றச்சாட்டு ஏற்கெனவே பா.ஜ.க தாக்கல்செய்த வழக்குபோலவே தெரிகிறது. எனக்குத் தெரிந்து இரண்டு வழக்குகளும் ஒரே கட்சியின் வேலைதான். என்னுடைய ஆட்சியைக் கலைக்கப் போடப்படும் திட்டம்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், வழக்கறிஞர் ராஜீவ் குமார் ஜார்க்கண்ட் காவல்துறையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

வழக்கறிஞரின் கைது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ஜார்க்கண்ட் காவல்துறையினர், ``வழக்கறிஞர் ராஜீவ் குமார் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதாக ராஞ்சி காவல்துறையிடமிருந்து எங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் காரணமாகவே கைதுசெய்திருக்கிறோம். விசாரணை நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்திருக்கின்றனர்.

முதல்வர்மீது குற்றம்சாட்டிய வழக்கறிஞர் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு அந்த மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!