Published:Updated:

`மதுரை கோட்டம் ரயில்வே பணியிடங்கள்’ - 90 சதவிகித இடங்களுக்கு வட மாநிலத்தவர்கள் தேர்வு!

மதுரை கோட்டத்தில் இருப்புப்பாதை தொடர்புடைய பணியிடங்களுக்கான தேர்வில் அதிகளவில் வட மாநிலத்தவர் வெற்றி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் தேர்வாகியுள்ளனர்.

ரயில்வே பணி தேர்வானவர்கள்
ரயில்வே பணி தேர்வானவர்கள் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

தமிழக ரயில்வேயில் வட மாநிலத்தவர் அதிகளவில் நுழைக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், மதுரை கோட்டத்தில் இருப்புப்பாதை தொடர்புடைய பணியிடங்களுக்கான தேர்வில் அதிகளவில் வட மாநிலத்தவர் வெற்றி பெற்றுள்ளது அந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வட மாநிலத்தவர்
வட மாநிலத்தவர்
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை கோட்டத்தில் இருப்புப்பாதை தொடர்பான 572 பணிகளுக்கான எழுத்துத்தேர்வை கடந்த ஆண்டு செப் 17-ம் தேதி ரயில்வே தேர்வு வாரியம் நடத்தியது. இந்த நிலையில், தேர்வில் அதிகளவில் வடமாநிலத்தவர்களும் அடுத்தபடியாக கேரள மாநிலத்தவர்களும் தேர்ச்சி அடைந்துள்ள விவரம் வெளியாகி எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்புப்பாதை தொடர்பான 572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் 20-க்கும் குறைவானவர்களே தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளனர். ஏற்கெனவே நடைபெற்ற ரயில்வே தேர்வுகளிலும் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

வட மாநிலத்தவர்
வட மாநிலத்தவர்
ஈ.ஜெ.நந்தகுமார்

இதற்கு மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளோ, `அதிகளவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வில் பங்கேற்காததே இதற்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ரயில்வே காலிப் பணியிடங்களில் அந்தந்த மாநிலத்தவருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கையை அரசியல் கட்சியினர் வைத்துவருகின்றனர்.

வட மாநிலத்தவர்
வட மாநிலத்தவர்
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழக ரயில்வே பணியிடங்களில் அதிகமாக வட மாநிலத்தவர்களே நியமிக்கப்பட்டு வருவது, ரயில்வே வாரியம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடு நடக்கிறதோ என்ற சந்தேகத்தை தேர்வெழுதிய தமிழர்கள் எழுப்பி வருகிறார்கள்.