Published:Updated:

``மாதமொருமுறை தேர்தல் நடத்தினால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காது" - தேசியவாத காங்கிரஸ் எம்.பி

சுப்ரியா சுலே ( ட்விட்டர் )

`தேர்தல்களால் மட்டுமே எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது. அப்படியென்றால் ஒவ்வொரு மாதமும் தேர்தல் நடத்தினால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காது.' - சுப்ரியா சுலே

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீட்டுச் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்
vikatan

இந்த நிலையில், நாடளுமன்றத்தில் நேற்று எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியும், அவையைத் திரும்பப் பெறக் கோரி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாகப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே , ``தேர்தல்களால் மட்டுமே எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது. அப்படியென்றால் ஒவ்வொரு மாதமும் தேர்தல் நடத்தினால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism