Published:Updated:

``ரஜினிகாந்தைப் போல மற்ற நடிகர்களும் தேசியக்கொடியை டி.பி-யாக வைக்கவேண்டும்!" - எல்.முருகன்

எல்.முருகன்

தமிழ்நாடு அரசு போதைப்பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதே சமயம், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்கூட என்றார், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

``ரஜினிகாந்தைப் போல மற்ற நடிகர்களும் தேசியக்கொடியை டி.பி-யாக வைக்கவேண்டும்!" - எல்.முருகன்

தமிழ்நாடு அரசு போதைப்பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதே சமயம், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்கூட என்றார், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Published:Updated:
எல்.முருகன்

சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரன் மணிமண்டபம் பாளையங்கோட்டையில் அமைந்திருக்கிறது. ஆகஸ்ட் 20-ம் தேதி அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

இந்த ஆண்டு, ஒண்டிவீரன் நினைவு தினத்தன்று மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வருகை தரவிருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியின்போது மத்திய அரசு சார்பாக ஒண்டிவீரன் நினைவு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்க மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று நெல்லைக்கு வந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சரான எல்.முருகன், ஒண்டிவீரன் நினைவுதின நிகழ்ச்சிகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசுத் துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

கட்சி நிர்வாகிகளுடன் எல்.முருகன்
கட்சி நிர்வாகிகளுடன் எல்.முருகன்

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ”சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட ஒண்டி வீரனின் நினைவாக தபால் தலை வெளியிடப்படவிருக்கிறது. அதற்கான நிகழ்ச்சி வரும் 20-ம் தேதி நடக்கவுள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, தேசபக்தி உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுவார்கள். நூறாவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், இந்தியா உலகத்திற்கே வழிகாட்டும் தேசமாக இருக்கும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

எல்.முருகனுடன் நயினார் நாகேந்திரன்
எல்.முருகனுடன் நயினார் நாகேந்திரன்

தேசபக்தி நிறைந்த ரஜினிகாந்தைப் போல மற்ற நடிகர்களும் சமூக வலைதளங்களில் தேசியக்கொடியை டி.பி-யாக வைக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனையை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். அதே சமயம், டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது” என்று எல்.முருகன் தெரிவித்தார்.