Published:Updated:

பாஜக ஆளும் மாநிலங்களில் இயங்கும் இலவச திட்டங்கள் என்னென்ன?!

பிரதமர் மோடி

``இலவசங்கள் விஷயத்தில் பிரதமரும் அவரின் அரசும் தங்களை கண்ணாடியில் பார்ப்பது போல் தெரிகிறது” என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் இயங்கும் இலவச திட்டங்கள் என்னென்ன?!

``இலவசங்கள் விஷயத்தில் பிரதமரும் அவரின் அரசும் தங்களை கண்ணாடியில் பார்ப்பது போல் தெரிகிறது” என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

Published:Updated:
பிரதமர் மோடி

இலவசங்கள் தேவையா, தேவையில்லையா என்கிற விவாதம் தேசிய அளவில் கவனம் பெற தொடங்யிருக்கிறது. ``நாட்டின் பொருளாதாரத்தை இலவசங்கள் அழிக்கின்றன” என்று பிரதமர் மோடி ஜூலை மாதத்தில் இந்த விவாதத்தை தொடங்கி வைத்தார். சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில், ``தேர்தலின் போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி கொடுக்கிற கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்” என்று மனுதாரர் பக்கத்தில் கோரிக்கை வைக்கப்படுகிறது. நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தாலும் கூட, ``இலவசங்கள் குறித்து ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறது.

பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்

இதனையடுத்து மீண்டும் பிரதமர், ``தேர்தலின்போது சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும். இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என சிலர் கருதுகின்றனர். இந்திய அரசியலில் இருந்து இலவசத் திட்டக் கலாசாரத்தை வேரறுக்க வேண்டும்” என்று சமீபத்திய நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் கடுமையான எதிர்வினை ஆற்றி இருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தேசிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிதியமைச்சர் பி.டி.ஆர், ``எனது முதலமைச்சர் என்னிடம் பணி ஒன்றை ஒப்படைத்துள்ளார். அதைத் திறம்படச் செய்து கொண்டிருக்கிறேன். மானியங்கள்-இலவசங்களைக் கொடுத்த பின்பும் எங்கள் மாநிலம் மற்ற மாநிலங்களை விட உயர்ந்து தானே இருக்கிறது. எங்கள் தனி நபர் வருமானத்துக்கு என்ன குறைச்சல் இங்கே? மக்கள் கொடுத்த ஆதரவில் ஆட்சியில் இருக்கும் நாங்கள் மக்களுக்கு திரும்ப செய்வதை தடுக்க உங்களுக்கு சட்டபூர்வமான அதிகாரம் எங்குள்ளது? எங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு நீஙகள் சாதித்து விட்டதுதான் என்ன? எங்களிடம் இருந்து ஒரு ரூபாய் சென்றால் அது 33 அல்லது 35 பைசாவாகத்தான் திரும்ப வருகிறது. அதற்கும் மேல், இப்படிதான் செய்ய வேண்டும் என எங்களுக்கு அறிவுரை சொல்வது ஜனநாயக அத்துமீறலல்லவா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.

குஜராத் - பூபேந்திர படேல் பதவியேற்பு
குஜராத் - பூபேந்திர படேல் பதவியேற்பு
ட்விட்டர்

நிலைமை இவ்வாறு இருக்க, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதற்கு முரணாக சில இலவச அறிவிப்புகளை தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் குஜராத் மாநில பட்ஜெட் அறிவிப்பில்,

- 4,000 கிராமங்களுக்கு இலவச Wi-Fi

- ஒரு கிலோ பருப்பு, 2 கிலோ கிராம் சமையல் எண்ணெய், உள்ளிட்டவை கர்ப்பிணிகளுக்கும், தாய்மார்களுக்கு 1,000 நாட்கள் கொடுக்கப்படும்.

- விவசாயிகளுக்கு ஒரு ட்ரம், இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்.

- அனைத்து மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், என அறிவித்துள்ளது.

ஜெய்ராம் தாக்கூர் - மோடி
ஜெய்ராம் தாக்கூர் - மோடி

அதேபோல் இமாச்சல் பிரதேஷ் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், “125 யூனிட் இலவச மின்சாரம், கிராமங்களில் தண்ணீர் வரி ரத்து, பெண்களுக்கு பேருந்து கட்டணத்தில் 50% இலவசம்” என்று அறிவித்துள்ளார்.

இதற்கு முன் கொரோனா பேரிடரைக் கையாளத் தவறியது, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னை எனப் பல விஷயங்கள் பாஜகவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நிலையில் அத்தனையும் முறியடிக்கப்பட்டு உத்திரப்பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றது. பாஜகவின் வெற்றிக்கு சமூக வாக்காளர்களின் ஆதரவு, கொரோனா பேரிடரின் போது அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்கள், மாநிலத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தியது ஆகியவை முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன.

யோகி - மோடி
யோகி - மோடி

அதில் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்காக பாஜக 'லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா 2022' என்ற பெயரில் தனது தேர்தல் அறிக்கையையில்,

- விவசாயிகளுக்கு பாசனத்திற்கு இலவச மின்சாரம்.

- கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு 'ராணி லட்சுமிபாய் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ், இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும்.

- 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பொது போக்குவரத்து பயணம்.

- மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.

போன்ற இலவச திட்டங்களும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக இலவச திட்டங்கள் குறித்து மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக ஒரு முடிவும், மாநிலங்களில் ஒரு முடிவும் எடுத்து வருவது குறித்து, “இலவசங்கள் விஷயத்தில் பிரதமரும் அவரின் அரசும் தங்களை கண்ணாடியில் பார்ப்பது போல் தெரிகிறது” என்கிற விமர்சனம் வலுத்து வருகிறது.