Published:Updated:

பிபின் ராவத், சஞ்சய் காந்தி, செளந்தர்யா | விமான விபத்துகளில் உயிரிழந்த முக்கிய புள்ளிகள்

பிபின் ராவத்
News
பிபின் ராவத்

முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது.

முப்படை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது. 14 பேர் பயணம் செய்த அந்த ஹெலிகாப்டரில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயர் ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்த நாட்டின் மிக முக்கிய அதிகாரியின் இந்த விபத்து இந்திய முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப்போன்ற எதிர்பாராத விமான விபத்துகளில் சிக்கி உயிரிழந்த முக்கிய பிரபலங்களின் பட்டியல் இதோ

சஞ்சய் காந்தி

முன்னாள் இந்திய பிரதமர்களான இந்திரா காந்தியின் மகனும் ராஜிவ் காந்தியின் இளைய சகோதரருமான சஞ்சய் காந்தி 1980-ம் ஆண்டு டெல்லியில் நடந்த விமான விபத்தொன்றில் உயிரிழந்தார்.

Sanjay Gandhi
Sanjay Gandhi

சாகச விமானம் ஓட்டுவதில் அதிக ஆர்வமுடையவரான சஞ்சய் இந்திரா காந்திக்கு பிறகு காங்கிரசை தலைமையேற்று நடத்துவார் என எதிர்பார்ப்பட்ட நிலையில் டெல்லி ஃபிளையிங் கிளப்பின் புதிய விமானம் ஒன்றை இயக்ககும் வேளையில் அவரின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாதவ் ராவ் சிந்தியா

காங்கிரசின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் மாதவ் ராவ் சிந்தியா. 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இவர் பயணம் செய்த விமானம் உத்திர பிரதேச மாநிலத்தின் மணிப்புரி மாவட்டத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது .

Madhavrao Scindia
Madhavrao Scindia

1971 ஆண்டில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் ஒருமுறை கூட தேர்தலில் தோல்வியடையாதவர்.

GMC பாலயோகி

நாடாளுமன்றத்தின் பனிரெண்டாவது அவை தலைவரான GMC பாலயோகி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கைகளூர் அருகே மார்ச் 3 , 2002-இல் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

GMC Balayogi
GMC Balayogi

YS ராஜசேகர ரெட்டி

ஆந்திரத்தின் இரு முறை முதல்வரான ராஜசேகர ரெட்டி 2009-ம் ஆண்டு ருத்ரகொண்டா மலைப்பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தேடுதல் வேட்டைக்கு பிறகே இவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

YSR Rajasekara Reddy
YSR Rajasekara Reddy

சௌந்தர்யா

Actress Sowndarya
Actress Sowndarya

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான சௌந்தர்யா 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெங்களூரு அருகே நடந்த ஹெலிக்காப்டர் விபத்தில் காலமானார். பாரதிய ஜனதாவின் தேர்தல் பரப்புரைக்காக ஆந்திர மாநிலத்திற்கு பயணப்பட பெங்களுருவில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.