Published:Updated:

Live திமுக பொதுக்குழு கூட்டம்: துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம்! - ஸ்டாலின் அறிவிப்பு

கனிமொழி - ஸ்டாலின்
Live Update
கனிமொழி - ஸ்டாலின்

திமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான முக்கிய செய்திகளின் தொகுப்பு...!

09 Oct 2022 11 AM

``அண்ணா, அப்பா இல்லாத இடத்திலே நான் உங்களை வைத்து பார்க்கிறேன்...” - கனிமொழி

Live திமுக பொதுக்குழு கூட்டம்:  துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம்! - ஸ்டாலின் அறிவிப்பு

``அண்ணா, அப்பா இல்லாத இடத்திலே நான் உங்களை வைத்து பார்க்கிறேன். உங்கள் வழியிலேயே நீங்கள் எடுத்து வைக்கும் அடியில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் போராட்டங்களில் என அத்தனையிலும் உங்கள் பின்னால் அணிவகுக்க தயாராக இருக்கிறேன்” என பொதுக்குழுவில் புதிதாக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கனிமொழி பேசினார்.

09 Oct 2022 11 AM

திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள், நிர்வாகிகள்...

09 Oct 2022 11 AM

`அத்தைக்கு வாழ்த்துகள்...” - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி!
உதயநிதி!

``புதிதாக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் என்னுடைய அத்தை, தலைவரின் தங்கை, கலைஞரின் அன்பு மகள் கனிமொழி கருணாநிதிக்கு வாழ்த்துகள்” என பொதுக்குழு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்.

09 Oct 2022 10 AM

திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம்! - ஸ்டாலின் அறிவிப்பு 

சென்னையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மீண்டும் ஸ்டாலின் தேர்வான நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழியை நியமனம் செய்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், ராசா, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

09 Oct 2022 10 AM

சென்னையில்திமுக தலைவராக மீண்டும் ஸ்டாலின் தேர்வு!  

ஸ்டாலின்
ஸ்டாலின்

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் திமுக தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரை தவிர யாரும் போட்டியிடாத காரணத்தால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ஸ்டாலின். மேலும் பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர் பாலுவும் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.

09 Oct 2022 9 AM

திமுக பொதுக்குழு கூட்டம்:

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இதில் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.

கலைஞர் அரங்கம் போன்று செட்
கலைஞர் அரங்கம் போன்று செட்

மேலும் பொது செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவர். பொதுக்குழுவில் 4,500 பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொதுக்குழு கூட்டம் அரங்கம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. காலை முதலே அனைத்து மாவட்டங்களில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்ட அரங்குக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.