Published:Updated:

``இது புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்!" - மோடி #Budget2019 #LiveUpdates

பிரேம் குமார் எஸ்.கே.
செ.கார்த்திகேயன்

மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் நிதியமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டின் ஹைலைட்ஸ்...!

மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்
05 Jul 2019 2 PM
05 Jul 2019 1 PM

மோடி புகழாரம்..!

மோடி
மோடி
ANI

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, ``இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான பட்ஜெட். இது நம்பிக்கை அளிக்கும் பட்ஜெட்” என்று புகழ்ந்தார்.

05 Jul 2019 1 PM

சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்த பெட்ரோல் டீசலுக்கு நெடுச்சாலைத் துறை வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிப்பு. தங்கம் இறக்குமதி மீதான வரி 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதமாக அதிகரிப்பு. இதன் காரணமாக தங்கத்தின் விலை உயரும்!

05 Jul 2019 1 PM

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை மேலும் சுலபமாக்கப்படும்!

ஒரு நாடு, ஒரு வரி, ஒரு மார்க்கெட் என்கிற நிலைக்கு ஜிஎஸ்டி வரியின் பங்கு மிகப்பெரியது. இந்த வரி விதிப்பு முறையால் ஆண்டுக்கு 92,000 கோடி ரூபாய் வரை சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு முறை மேலும் சுலபமாக்கப்படும்.

05 Jul 2019 1 PM

ராணுவ தளவாட இறக்குமதிக்கு சுங்கவரி இனி கிடையாது!

05 Jul 2019 1 PM

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் எடுத்தால் வரி பிடித்தம் 2 சதவிகிதம். ரூ. 2 முதல் ரூ. 5 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 3 சதவிகிதம் கூடுதல் வரி. ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி.

05 Jul 2019 1 PM
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிவிதிப்பு தளர்த்தப்படும்.!
நிர்மலா சீதாராமன்
05 Jul 2019 1 PM

குறைந்தவிலை வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1.50 வரி விலக்கு. இதன் மூலம் 15 ஆண்டுகள் வீட்டுக்கடனுக்கு ரூ.7 லட்சம் வரை மிச்சமாகும். ரூ.45 லட்சத்திற்கு குறைவாக உள்ள குறைந்த விலை வீடுகள் வாங்குபவர்களுக்கு வரிச்சலுகை.

05 Jul 2019 1 PM

``வருமான வரி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியதில்லை. ஆன்லைன் மூலமாகவே பதிலளிக்க முடியும்!”

05 Jul 2019 1 PM

வங்கிக் கடனில் மின்சார வாகனம் வாங்கினால், 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு செய்யப்படும்.

ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் கார்பரேட் நிறுவனங்களுக்கு 25% வரி. நாட்டில் 99.3% நிறுவனங்கள் இந்த வரி வரம்புக்குள் வருகின்றன.

வருமான வரி தாக்கல் செய்ய பான்கார்டும் பயன்படுத்தலாம், அது இல்லையென்றால் ஆதார் கார்டு எண்ணையும் பயன்படுத்தி வரிதாக்கல் செய்யலாம்!
நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
05 Jul 2019 1 PM

வருமான வரி வரம்பில் புதிய அறிவிப்புகள் இல்லை!

5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறுவோருக்கு வருமான வரி இல்லை என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதே வரிசலுகை தொடரும்.

05 Jul 2019 12 PM
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே, மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே, வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம்போலத், தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய புறநானூறு பாடல்!
05 Jul 2019 12 PM

பட்ஜெட்டில் புறநானூறு!

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,

மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,

கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம்போலத்,

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,

மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,

கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம்போலத்,

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

நாட்டின் வளர்ச்சியில் வரி செலுத்துபவர்களின் பங்கு மிக முக்கியமானது எனச் சொல்லி, புறநானுற்றிலிருந்து ஓர் அரசன் எப்படி வரி வசூல் செய்யவேண்டும் என்பதற்கான 'யானை புகுந்த நிலம்’ என்ற பிசிராந்தையாரின் கூற்றை விளக்கி நிர்மலா சீதாராமன் பேச்சு., நேரடி வரி வருவாய் 6.3 லட்சம் கோடியிலிருந்து 11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

 ``இது புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்!" - மோடி #Budget2019 #LiveUpdates
05 Jul 2019 12 PM

உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 100 லட்சம் கோடி!

வங்கிகளின் வாராக்கடன் கடந்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி முதலீட்டு மூலதனம் தரப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரம், சாலை மாதிரியான நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 100 லட்சம் கோடி ரூபாயை அரசு முதலீடு செய்யும்.

05 Jul 2019 12 PM
இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார்கார்டு வழங்கப்படும்!
நிர்மலா சீதாராமன்
 ``இது புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்!" - மோடி #Budget2019 #LiveUpdates

இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார்கார்டு வழங்கப்படும். வெளிநாடுகளுடன் சுமூகமான உறவை கடைபிடிக்க புதிதாக 4 வெளிநாட்டு தூதரங்கள் அமைக்கப்படும்.

05 Jul 2019 12 PM

2024 -ம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் நீர் விநியோகம் ஏற்படுத்தப்படும்!

05 Jul 2019 12 PM
சுய உதவிக் குழுக்கள் மூலம் முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்!
நிர்மலா சீதாராமன்
05 Jul 2019 12 PM

``உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை 35 கோடி எல்.இ.டி பல்புகள் வழங்கியதால், ரூ.18,341 கோடி சேமிக்கப்பட்டுள்ளது”

05 Jul 2019 12 PM

ஸ்டார்ட்-அப் துறைக்காக தனியாக தொலைக்காட்சி நிகழ்ச்சி!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தொழிலாளர் முன்னேற்றத்துக்கு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும்.கழிவு சுத்திகரிப்புக்காக ரோபோட்டுகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்க கவுஷல் விகாஸ் யோஜனா நிறுவப்படும். எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

05 Jul 2019 12 PM

ரோபோடிக்ஸ் போன்ற நவீன துறைகளில் இந்திய மாணவர்கள் பயிற்சி அளிக்க முயற்சி எடுக்கப்படும். எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

05 Jul 2019 12 PM

உலகின் சிறந்த கல்விநிறுவனப் பட்டியலில் இந்தியா!

உலகின் மிகச்சிறந்த கல்விமுறையாக நமது புதிய கல்விக்கொள்கை இருக்கும். என்சைக்ளோபீடியா போல காந்திபீடியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு காந்தியக் கொள்கைகள் இளைஞர்களிடம் கொண்டு செல்லப்படும். கல்வித்துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கப்படும். உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும்.

உலகின் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில், 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா இடம்பெறவில்லை. தற்போது 3 இந்திய கல்விநிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் பணிபுரியும் அளவுக்கு இந்திய இளைஞர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.
நிர்மலா சீதாராமன்
05 Jul 2019 12 PM

தூய்மை இந்தியா!!

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 9.64 கழிப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 5.6 கோடி கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமமாக மாறியுள்ளது. காந்தியின் 150வது பிறந்த தினத்திற்குள் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே இலக்கு.

தீய்மை இந்தியா
தீய்மை இந்தியா
05 Jul 2019 12 PM

விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர்த்தப்படும்!

உணவுத் துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாறியதற்கு காரணமான விவசாயிகளுக்கு நன்றி. விவாசயத் துறையில் தனியார் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவோம் என நம்பிக்கை உள்ளது. பருத்தி உற்பத்தியில் தற்போது இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. விவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்துக்கான தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது மிகவும் முக்கியமான குறிக்கோள்.

விவசாயம்
விவசாயம்
05 Jul 2019 11 AM

பசுமை சாலைகள்!

பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் பசுமை சாலைகள் சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்காத வகையில் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 80,250 கோடி ரூபாயில் 1,25,000 கி.மீ தூரத்துக்கான சாலைகள் அமைக்கப்படும்.

05 Jul 2019 11 AM
கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
நிர்மலா சீதாராமன்
05 Jul 2019 11 AM

ஏழைகளுக்கு வீடு..!

2022-ம் ஆண்டிற்குள் அல்லது 75-வது சுதந்திர தின விழா ஆண்டின்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊரக குடும்பங்களுக்கும் முழுமையான மின்சராம் மற்றும் எரிபொருள் இணைப்பை பெற்றிருப்பார்கள். அடுத்தகட்டமாக நாடு முழுவதிலுமுள்ள 1.9 கோடி ஏழை குடும்பத்தினருக்கு 2022-ம் ஆண்டுக்குள் வீடு வழக்கப்படும்.

05 Jul 2019 11 AM

விண்வெளித் துறைக்கு கீழ் புதிய அமைப்பு!

விண்வெளித் துறைக்கு கீழ் புதிதாக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் விண்வெளித் துறையின் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!

05 Jul 2019 11 AM
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நம் நாட்டில் செய்யும் முதலீட்டு அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்!
நிர்மலா சீதாராமன்
05 Jul 2019 11 AM

அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படும்!

சில்லறை மற்றும் வணிகம் உள்ளிட்டவற்றில் கூடுதல் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும். விமான போக்குவரத்துத் துறை மற்றும் ஊடகம் ஆகிய துறைகளிலும் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படும்!

05 Jul 2019 11 AM

சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு 350 கோடி ரூபாய்!

ஆண்டுதோறும் சராசரியாக 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக இந்த ஆண்டு மட்டும் 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஏற்கெனவே அறிவித்தபடி முழுமையாக செயல்படுத்தப்படும்.

மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்
05 Jul 2019 11 AM

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீடு!

சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தமாக இருந்தபோதிலும் இந்தியாவில் முதலீடு அதிகரித்து வருகிறது. காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படும். சில்லறை மற்றும் வணிகம், விமானத் துறை உள்ளிட்டவற்றில் கூடுதல் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும்.

05 Jul 2019 11 AM

சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம்

ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் 3 கோடி பேர் பயன்பெறுவர்!

05 Jul 2019 11 AM

ஒரே நாடு, ஒரே மின்சாரம்!

ஒரே நாடு, ஒரே மின்சாரம் விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சம அளவில் மின் விநியோகம் செய்யப்படும்

ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

05 Jul 2019 11 AM

ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய்!

2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்!

05 Jul 2019 11 AM
சரக்கு போக்குவரத்திற்காக நதிகளை பயன்படுத்த அதிக கவனம் செலுத்தப்படும்
நிர்மலா சீதாராமன்
05 Jul 2019 11 AM

மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்!

05 Jul 2019 11 AM
கடந்த 5 ஆண்டுகளில் 657 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது!
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
ANI
05 Jul 2019 11 AM

பட்ஜெட் தாக்கல் நேரலை...!

05 Jul 2019 11 AM

5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர்!

கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் ஏழை எளிய மக்கள் பயன் அடைந்திருக்கிறார்கள். வருகிற 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலருக்கு உயர்த்த திட்டம்.

மேக் இந்தியா திட்டம் இந்தியாவின் வருமானத்தை அதிகரிக்கிறது. அந்த திட்டம் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும். மேலும் அந்நிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

05 Jul 2019 11 AM

அனைவருக்கும் வீடு, கழிவறை!

சந்திரயான், சுகன்யான் என விண்வெளித் துறையில் சாதனை படைந்து வருகிறது இந்தியா. டிஜிட்டல் இந்தியாவின் பலனை நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை கொண்டு செல்வதே அரசின் நோக்கம். அனைவருக்கும் வீடு, கழிவறை வழங்குவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது

05 Jul 2019 11 AM

உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு இரு மடங்கு நிதி!

உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அரசின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆட்சி அமைக்கும் போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த இந்திய பொருளாதாரம், தற்போது 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.

05 Jul 2019 11 AM

தொடங்கியது பட்ஜெட் உரை!

மக்களவையில் 2019-20 -ம் ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

05 Jul 2019 11 AM

மக்களவையில் நிர்மலா சீதாராமன் பெற்றோர்!

இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் தங்களின் மகள் முதல்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்வதைக் காண அவரின் பெற்றோர் சவித்திரி மற்றும் நாராயணன் சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்றம் வந்துள்ளனர்.

05 Jul 2019 10 AM

நாடாளுமன்றம் வந்த பட்ஜெட் நகல்கள்!

இன்று காலை 11 மணிக்கு நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், மக்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள பட்ஜெட் நகல்கள் நாடாளுமன்றத்துக்கு எடுத்து வரப்பட்டது!

நாடாளுமன்ற வளாகம்
நாடாளுமன்ற வளாகம்
ANI
05 Jul 2019 10 AM

குடியரசுத் தலைவர் மாளிகையில் நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

05 Jul 2019 10 AM

சிவப்பு நிறத் துணியில் பட்ஜெட்!

வழக்கமாகத் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை அமைச்சர்கள் சூட்கேஸில் எடுத்து வருவார்கள். ஆனால், தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவப்பு நிறத் துணியில் பொதிந்து பட்ஜெட்டை எடுத்து வந்திருக்கிறார்!

சிவப்பு நிறத் துணியில் பட்ஜெட்
சிவப்பு நிறத் துணியில் பட்ஜெட்
ANI
05 Jul 2019 9 AM

அலுவலகம் வந்த நிர்மலா சீதாராமன்!

மத்திய பொது பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், தனது வீட்டில் இருந்து அலுவலகம் வந்தார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

05 Jul 2019 9 AM

தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

17 - வது மக்களைவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மத்தியில் பெரும் வெற்றியைப் பதிவு செய்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பா.ஜ.க. மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், கடந்த அமைச்சரவையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மக்களவைத் தேர்தல் காரணமாக 2019 -20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது முழு பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பதவியேற்றதும் பொது பட்ஜெட்டுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கினார் நிர்மலா சீதாராமன்.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையில் இருக்கும்பட்சத்தில் முழுமையான வரி விலக்கு என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தனிநபர் வருமான உச்ச வரம்பில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.