Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கோவை: எஸ்.பி வேலுமணி வார்டிலும் திமுக வெற்றி! | #Live

உள்ளாட்சித் தேர்தல்
Live Update
உள்ளாட்சித் தேர்தல்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து சுவாரஸ்ய அப்டேட்கள் மற்றும் முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

09 Mar 2022 11 AM

எஸ்.பி வேலுமணி சொந்த வார்டிலும் திமுக வெற்றி!

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு அமைந்துள்ள கோவை மாநகராட்சி 92-வது வார்டு பகுதியில் தி.மு.க வேட்பாளர் வெற்றிசெல்வன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் செல்லப்பனை வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறார்.

09 Mar 2022 11 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: சென்னை தி.நகரில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி!

சென்னை தியாகராய நகர் 134-வது வார்டில் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்ட உமா ஆனந்தன் வெற்றிபெற்றிருக்கிறார்.

134-வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுசீலா கோபாலகிருஷ்ணன் 3,503 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் உமா ஆனந்தன் 5,539 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் அனுராதா 2,695 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

அதனால், பா.ஜ.க வேட்பாளர் உமா ஆனந்தன் 2,036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு வெற்றி சான்றிதழும் வழங்கப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
09 Mar 2022 11 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரையில் வெற்றிபெற்றக் கையோடு திமுக-வில் இணைந்த வேட்பாளர்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்டு வருகின்றன. மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 9-வது வார்டில் அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட அருண் சுந்தரபிரபு வெற்றிபெற்றதாக சிறிது நேரத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

இந்த நிலையில், அ.தி.மு.க-வில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், தற்போது வெற்றிபெற்றக் கையோடு தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்.

09 Mar 2022 11 AM

தேர்தல் களத்தில் வெற்றிவாகைச் சூடிய இளம்பெண்கள்!

09 Mar 2022 11 AM

கோவையில் ஏழு நகராட்சிகளில் திமுக வெற்றி!

திமுக
திமுக

கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தப்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய நகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

09 Mar 2022 11 AM
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கோவை: எஸ்.பி வேலுமணி வார்டிலும் திமுக வெற்றி! | #Live

மதுரை மாநகராட்சி 86-வது வார்டில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் பூமா ஜனாஸ்ரீ மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் பா.சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

09 Mar 2022 11 AM

கோட்டக்குப்பம் நகராட்சி விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி!

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி 21-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் சைதானி முகமது கவுஸ் வெற்றிபெற்றார். இவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாகக் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது,

நாகர்கோவில் மாநகராட்சியில் தி.மு.க சார்பில் 17-வது வார்டில் வெற்றிபெற்ற 21 வயது கல்லூரி மாணவி கெளசுகி பேட்டி!

09 Mar 2022 11 AM

பொள்ளாச்சி நகராட்சியைக் கைப்பற்றியது திமுக!

பொள்ளாச்சி நகராட்சியிலுள்ள 36 வார்டுகளில் 23 வார்டுகளில் திமுக-வும், அதிமுக 3 வார்டுகளிலும், 2 -ல் சுயேச்சைகளும் வெற்றி வெற்றிபெற்றுள்ளன.

09 Mar 2022 11 AM

புதுக்கோட்டை நகராட்சி: விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி!

விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி
விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சியில், 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாகப் போட்டியிட்ட பர்வேஸ் வெற்றிபெற்றிருக்கிறார்.

09 Mar 2022 11 AM

சென்னை 23-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

சென்னை 23-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற்றிருக்கிறார்.

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர்கள் 19 பேரும், அதிமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

சுயேச்சை வேட்பாளர்
சுயேச்சை வேட்பாளர்

இந்த நிலையில், சென்னை 23-வது வார்டில் தீப்பெட்டி சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ராஜன் என்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

09 Mar 2022 11 AM

`உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டவை!’

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கோவை: எஸ்.பி வேலுமணி வார்டிலும் திமுக வெற்றி! | #Live

கோவை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. இந்நிலையில், கோவையில் வெற்றிபெறும் வேட்பாளர்களின் சான்றிதழில் இந்த முடிவுகள் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருபாலினி
கிருபாலினி

கோவை மாநகராட்சி 7-வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜன் வெற்றி. அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி கார்த்திகேயன் தோல்வி.

09 Mar 2022 11 AM

18 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை! 

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கோவை: எஸ்.பி வேலுமணி வார்டிலும் திமுக வெற்றி! | #Live

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில், அவற்றில் 18 மாநகராட்சிகளின் முன்னணி நிலவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த 18 மாநகராட்சிகளிலும் திமுக-வே முன்னிலையில் இருக்கிறது.

சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் திமுக முன்னிலையில் இருக்கிறது. ஆவடி மாநகராட்சியில் திமுக, அதிமுக தலா ஓர் இடத்தில் முன்னிலையில் இருக்கிறது.

09 Mar 2022 11 AM

அதிமுக-வை வீழ்த்திய பாஜக வேட்பாளர்!

நெல்லை பணகுடி பேரூராட்சியின் நான்காவது வார்டில் குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றார் அதிமுக வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் தலா 266 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்ததால் குலுக்கல் முறை பின்பற்றப்பட்டது.

09 Mar 2022 11 AM

மாநகராட்சிகளில் திமுக முன்னிலை! 

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. பல்வேறு இடங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்த நிலையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

சென்னை, வேலூர், ஈரோடு மாநகராட்சிகளில் திமுக ஆரம்பம் முதலே முன்னிலை எடுத்திருக்கிறது. இதுவரை ஒன்பது மாநகராட்சிகளில் திமுக முன்னிலையில் இருக்கிறது

09 Mar 2022 11 AM

கடலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டு சாவி தொலைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பூட்டு உடைக்கப்பட்டு அறை திறக்கப்பட்டது.

பூட்டு
பூட்டு

ராமநாதபுரத்தில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை... இடம்: விழுப்புரம்

09 Mar 2022 11 AM

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

தமிழகத்திலுள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் எண்ணும் பணி தொடங்கியது.

09 Mar 2022 11 AM

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: 

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கோவை: எஸ்.பி வேலுமணி வார்டிலும் திமுக வெற்றி! | #Live

தமிழகத்திலுள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் சுமார் ஒரு லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

09 Mar 2022 11 AM

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் 2022

உள்ளாட்சி உய்யலாலா!
உள்ளாட்சி உய்யலாலா!

மொத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்:

மாநகராட்சி - 21

நகராட்சி - 138

பேரூராட்சி - 490.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் 60.7 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. பேரூராட்சிகள், நகராட்சிகளில் வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருந்தாலும், மாநகரப் பகுதிகளில் மந்தமாகவே காணப்பட்டது. குறிப்பாக, சென்னையில் 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பதிவானது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து 268 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism