Published:Updated:

Live Updates: பெங்களுரு டு சென்னை... 23 மணி நேரப் பயணம்! - சென்னை திரும்பினார் சசிகலா

சசிகலா
சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து, கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்து, சசிகலா இன்று தமிழகம் திரும்புகிறார். அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

09 Feb 2021 6 AM

சென்னை திரும்பினார் சசிகலா

சசிகலா
சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து, கொரோனா தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து சசிகலா நேற்று காலை சுமார் 7:30 மணி அளவில் பெங்களுரிலிருந்து சென்னை புறப்பட்டார். வழியில் தொடர்ந்து ஆதரவாளர்களை அவர் சந்தித்து வந்ததால், அவரின் வருகை தாமதமானது. இந்தநிலையில், இன்று அதிகாலைதான் சென்னை வந்தார். பயணம் தொடங்கி சுமார் 23 மணி நேரம் கழித்து தற்போது தி.நகரில் இருக்கும் வீட்டுக்கு வந்திருக்கிறார் சசிகலா. முன்னதாக ராமாபுரத்தில் எம்.ஜி.ஆர் இல்லத்தில் மலர் தூவி மரியாதை செய்தார் சசிகலா. சசிகலாவுடன் இளவரசியும், தினகரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சென்னை வந்தனர்.

09 Feb 2021 4 AM

ராமாபுரம் தோட்டத்தில் சசிகலா!

ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தும் சசிகலா. வீடியோ: கண்ணன் ர

Posted by Vikatan EMagazine on Monday, February 8, 2021

சொத்துக்குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து, பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிய சசிகலா, அதிகாலை 4:30 மணிக்கு, ராமாபுரம் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு வந்தார். இல்லத்துக்குள் சென்ற சசிகலா, எம்.ஜி.ஆர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

09 Feb 2021 3 AM

வண்ண விளக்குகளால் மின்னும் சசிகலா தங்கும் வீடு

இடம்:அபிபுல்லா சாலை, தி. நகர்

வீடியோ:பா.காளிமுத்து, பா.ரமேஷ் கண்ணன்

09 Feb 2021 3 AM

சென்னையில் சசிகலா..!

சொத்துக்குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து, பெங்களூரிலிந்து நேற்று காலை 7:30 மணி அளவில் சென்னை புறப்பட்டார் சசிகலா. வழியில் அவரின் ஆதரவாளர்களின் வரவேற்புகளை ஏற்றுக்கொண்ட அவர், தற்போதுதான் சென்னையை நெருங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட பெங்களூரிலிருந்து கிளம்பி 20 மணி நேரப் பயணத்துக்குப் பின்னர் தற்போது சென்னை பூந்தமல்லியைக் கடந்திருக்கிறார் சசிகலா.

சென்னை வந்தடைந்தார் சசிகலா இடம் : பூந்தமல்லி

Posted by Vikatan EMagazine on Monday, February 8, 2021
08 Feb 2021 9 PM

சசிகலாவுக்கு வரவேற்பு: அ.தி.மு.க-விலிருந்து ஏழு பேர் நீக்கம்!

சசிகலா இன்று பெங்களூரிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருக்கிறார். பெங்களுரிலிருந்து வந்த காரில் அ.தி.மு.க கொடி கட்டப்பட்டிருந்தது. தமிழக எல்லைப் பகுதியில் காரில் இருக்கும் கொடி அகற்றப்படலாம் என்பதால், அ.தி.மு.க நிர்வாகி ஒருவரின் காரில் பயணித்தார் சசிகலா. அதனால் தொடர்ந்து அ.தி.மு.க கொடியுடன் பயணித்துவருகிறார் சசிகலா.

Live Updates: பெங்களுரு டு சென்னை... 23 மணி நேரப் பயணம்! - சென்னை திரும்பினார் சசிகலா

இந்தநிலையில் ``அ.தி.மு.கவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சம்பங்கி, சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, பிரசாந்த் குமார், நாகராஜ், ஆனந்த் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

08 Feb 2021 7 PM

இன்னும் சில நிமிடங்களில் சசிகலா வேலூர் வரவிருக்கிறார். அவரை வரவேற்று வாணவேடிக்கையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆதரவாளர்கள்.

வீடியோ- லோகேஸ்வரன்.கோ

08 Feb 2021 5 PM

`தீவிர அரசியலில் ஈடுபடுவேன்!’- சசிகலா

சசிகலா
சசிகலா

கிருஷ்ணகிரி கந்திகுப்பத்தில் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் காரில் இருந்தபடியே சசிகலா பேசினார். அவர் பேசுகையில், ``விரைவில் அனைவரையும் சந்திப்பேன். நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பேன். தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன். ஜெயலலிதா நினைவிடம் ஏன் மூடப்பட்டது என மக்களுக்குத் தெரியும்’’ என்று பேசினார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு சசிகலா முதன்முறையாக ஆதரவாளர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.

08 Feb 2021 1 PM

சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தலாமா, எடப்பாடி செய்கிறாரா ஸ்டாலின் சொல்கிறாரா, உதயநிதி கையிலும் வேல், சபரிமலையில் பாஜக...

Posted by Vikatan EMagazine on Sunday, February 7, 2021
08 Feb 2021 12 PM

புறப்பட்ட சசிகலா... தடை போடும் போலீஸ்! - திக் திக் நிமிடங்கள்!

08 Feb 2021 12 PM

தீப்பிடித்து எரிந்த கார்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்து, பெங்களூரிலிருந்து சசிகலா சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார். இந்தநிலையில், கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதியில், சசிகலா வருகைக்காகப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சசிகலா வருகைக்காகப் பட்டாசு வெடிக்கப்பட்டபோது, யாரும் எதிர்பாராத நிலையில், இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தீயை அணைத்தனர். சசிகலா வருகைக்காக வெடிக்கப்பட்ட வெடியில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால், அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது!

08 Feb 2021 12 PM

கோயில்களில் வழிபடும் சசிகலா!

கோயில்களில் வழிபாடு!
கோயில்களில் வழிபாடு!

நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து சசிகலா இன்று சென்னை திரும்பிக்கொண்டிருக்கிறார். வழியில் அவரின் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்துவருகிறார்கள். தமிழக எல்லைக்கு வந்த பின்னர், வரிசையாகக் கோயில்களில் வழிபாடு செய்துவருகிறார். முன்னதாக ஓசூர் முத்துமாரி அம்மன் கோயிலில் வழிபாடு செய்த சசிகலா, பின்னர் ஸ்ரீ மகா ப்ரத்யங்கரா தேவி கோயிலில் வழிபாடுசெய்தார்.

08 Feb 2021 12 PM

வேலூர் பள்ளிகொண்டா டோல்கேட்: சசிகலாவை வரவேற்கக் காத்திருக்கும் தொண்டர்கள்!

08 Feb 2021 11 AM

முத்துமாரி அம்மன் கோயிலில் சசிகலா!

Live Updates: பெங்களுரு டு சென்னை... 23 மணி நேரப் பயணம்! - சென்னை திரும்பினார் சசிகலா

நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து சசிகலா இன்று தமிழகம் திரும்பியிருக்கிறார். தற்போது ஓசூர் முத்துமாரி அம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு செய்தார். அப்போது அவர் அ.தி.மு.க துண்டு அணிந்திருந்தார்.

08 Feb 2021 11 AM

கார் மாற்றம்... கொடியை அகற்றாத காவல்துறை!

Live Updates: பெங்களுரு டு சென்னை... 23 மணி நேரப் பயணம்! - சென்னை திரும்பினார் சசிகலா

பெங்களுரிருந்து புறப்பட்ட சசிகலா, தற்போது தமிழக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளிக்கு வந்திருக்கிறார். முன்னதாக அவர், தான் பயணித்த காரை மாற்றினார். சசிகலா தரப்புக்குச் சொந்தமான காரில் அ.தி.மு.க கொடி இருந்தால், அதை காவல்துறை அகற்றுவார்கள் என்பதால் வேறு ஒரு இன்னோவா காருக்கு மாறினார். அந்த கார் அ,தி.மு.க நிர்வாகி ஒருவருக்குச் சொந்தமான கார் என்ற கூறப்படுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாதாவரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரான தட்சணாமூர்த்திக்கு சொந்தமான கார்தான் அது என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக அந்த காரில் இருக்கும் கொடியை காவல்துறையினர் அகற்றவில்லை. கொடியை அகற்றுவது தொடர்பாக போலீஸார் நோட்டீஸ் வழங்கினர். எனினும், அ.தி.மு.க உறுப்பினரின் கார் என்பதால், கொடியை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது.

08 Feb 2021 10 AM

கார் மாறிய சசிகலா!

சசிகலா
சசிகலா

பெங்களூரிருந்து தமிழகம் நோக்கி வந்த சசிகலா காரில் அ.தி.மு.க கொடி பொருத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் எல்லைப் பகுதிக்கு முன்னதாக சசிகலா, தனது காரிலிருந்து வேறு ஒரு காருக்கு மாறினார். அதே போன்று அவர் பயணம் செய்துவந்த காரிலிருந்து அ.தி.மு.க கொடியும் அகற்றப்பட்டது. எனினும், சசிகலா மாறிய காரிலும் அ.தி.மு.க கொடியே இருக்கிறது. முன்னதாக தமிழக எல்லையில், அ.தி.மு.க கொடி அகற்றப்படும் என காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

08 Feb 2021 9 AM

சசிகலாவை வரவேற்க வைக்கப்பட்ட பேனர், மேடை அகற்றம்!

Live Updates: பெங்களுரு டு சென்னை... 23 மணி நேரப் பயணம்! - சென்னை திரும்பினார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறையிலிருந்த சசிகலா, இன்று சென்னை திரும்புகிறார். தமிழக எல்லைப் பகுதியில் ஆதரவாளர்கள் சசிகலாவை வரவேற்க தயார் நிலையில் இருக்கும் சூழலில், அங்கு அவரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை காவல்துறையினர் அகற்றினர். மேலும், சசிகலாவை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த மேடையும் அகற்றப்பட்டது.

08 Feb 2021 9 AM

தமிழக எல்லையில் சசிகலா ஆதரவாளர்கள்!

பெங்களூரிலிருந்து இன்று தமிழகம் திரும்பும் சசிகலாவை தமிழக எல்லைப் பகுதியில் வரவேற்க அவரின் ஆதரவாளர்கள் காலை முதலே காத்திருந்தார்கள். அந்தப் பகுதியில் போலீஸாரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். சசிகலா காரில் பொருத்தப்பட்டிருக்கும் அ.தி.மு.க கொடி அகற்றப்படும் என போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

பெங்களூரிலிருந்து இன்று தமிழகம் திரும்பும் சசிகலாவை தமிழக எல்லைப் பகுதியில் வரவேற்க காத்திருக்கும் அவரின் ஆதரவாளர்கள்: பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

இடம்: அத்திபள்ளி

08 Feb 2021 9 AM

காரில் அ.தி.மு.க கொடியுடன் தமிழகம் திரும்பும் சசிகலா! 

08 Feb 2021 8 AM

காரில் அ.தி.மு.க கொடி... புறப்பட்டார் சசிகலா!

தினகரனின் கார்!
தினகரனின் கார்!

இன்று காலை திட்டமிட்டபடி சசிகலா பெங்களூரு விடுதியிலிருந்து அ.தி.மு.க கொடி கட்டப்பட்ட வாகனத்தில் புறப்பட்டார். `சசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தக் கூடாது என தமிழக அமைச்சர்கள் அளித்த புகாரின் அடிப்படியில், தமிழக காவல்துறை தடை விதித்திருக்கும் நிலையில் சசிகலா காரில் தடையை மீறி அ.தி.மு.க கொடி பொருத்தப்பட்டுள்ளது.

காவல்துறை உத்தரவு
காவல்துறை உத்தரவு

சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் மற்றும் ஜெய ஆனந்த் ஆகியோர் வருகின்றனர்.

08 Feb 2021 8 AM

பெங்களுருவில் குவிந்த ஆதரவாளர்கள்!

Live Updates: பெங்களுரு டு சென்னை... 23 மணி நேரப் பயணம்! - சென்னை திரும்பினார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின் குணமடைந்து பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார். தற்போது தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்த நிலையில் இன்று அவர் பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்புகிறார். இதற்காக நேற்று முதல் அவர்தங்கி இருந்த விடுதியில் அவரின் ஆதரவாளர்கள் குவிந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு