Published:Updated:

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: `உண்மையில் இன்று ஒரு முக்கியமான நாள்!’ - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா செய்திகளின் தொகுப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

02 Aug 2021 4 PM

சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர்!

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா இன்று நடக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு உருவப்படத்தைத் திறந்துவைக்கவிருக்கிறார்.

சட்டசபை
சட்டசபை

இதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தற்போது ஆளுநர் மாளிகையிலிருந்து சட்டபேரவைக்கு வந்திருக்கிறார்.

02 Aug 2021 5 PM

வரவேற்புரை வழங்கும் சபாநாயகர் அப்பாவு!

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு
நன்றி: பொதிகை

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சபாநாயகர் அப்பாவு, வரவேற்புரை வழங்கினார்.

சட்டமன்றத்தில் 16-வது படம்; எதிர்ப்புகள் இல்லை; ஆனால்..! - கருணாநிதி படத் திறப்பு விழா ஒரு பார்வை
02 Aug 2021 5 PM

முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தைத் திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தைத் திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தைத் திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்!
நன்றி: பொதிகை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தைத் திறந்துவைத்தார். கருணாநிதியின் படத்தின் கீழே `காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

02 Aug 2021 5 PM

`வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய நாள்!’ - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய நாள் இந்நாள். பார் போற்றும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றிய சட்டமன்றம் இந்தச் சட்டமன்றம். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையைக் கொண்டுவந்த சட்டமன்றம் இந்தச் சட்டமன்றம்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
நன்றி: பொதிகை

தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெருமைகளை குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், அவரின் படத்தைத் திறந்துவைக்க வருகை தந்த குடியரசுத் தலைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

02 Aug 2021 5 PM

`தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க சமத்துவபுரம் அமைத்தவர் கருணாநிதி!’

முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழாவில் சிறப்புரை வழங்கினார். அப்போது அவர், சட்டமன்றத்தின் பெருமைகளையும், முன்னாள் முதல்வர்களின் செயல்பாடுகளையும் குறிப்பிட்டார். `தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். மேலும், ``இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் தனித்துவமாக விளங்குகிறது’’ என்றார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
நன்றி: பொதிகை

தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்துப் பேசிய ஆளுநர், ``ஏழை எளிய மக்களின் மனங்களை வென்றவர் கருணாநிதி. தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க சமத்துவபுரம் அமைத்தவர் கருணாநிதி. அவர் பல்வேறு துறைகளில் சிறப்பான அறிவைப் பெற்றிருந்தார்” என்றார்.

02 Aug 2021 6 PM

`புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி!’ - குடியரசுத் தலைவர்

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழில், `இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கருணாநிதியின் படத்தைத் திறந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் இன்று ஒரு முக்கியமான நாள்’ என்றார். மேலும் பாரதியின் வரிகளைக் குறிப்பிட்டு பேசினார்.

``மந்திரம் கற்போம்

வினைத் தந்திரம் கற்போம்

வானையளப்போம்

கடல்மீனையளப்போம்

சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்

சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்” என்று குறிப்பிட்டுப் பேசினார் குடியரசுத் தலைவர்.

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்துப் பேசிய குடியரசுத் தலைவர், ``புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர். இலக்கியம், சினிமா எனப் பல துறைகளுக்குப் பங்காற்றியவர்” எனக் குறிப்பிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு