Published:Updated:

`இந்தியா `இந்து நாடு' என்று அறிவிக்கப்படுமா?' அன்று அத்வானி விகடனுக்கு சொன்னதும், இன்று அமித் ஷா செய்வதும்!

VikatanOriginals
News
VikatanOriginals

இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் முயற்சியை அமித் ஷாவும், மோடியும் இன்றைக்கு முன்னின்று நடத்திக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்களது முன்னோடியான அத்வானி இதுகுறித்து என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? #VikatanOriginals

குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா 2019... லோக் சபா, ராஜ்ய சபா தொடங்கி தமிழகத்தின் `டீக்கடை பென்ச்' வரை இன்றைக்கு இதுதான் பேசுபொருள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறி, இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இனி இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் இந்த மசோதாவின் மேலோட்டமான சாராம்சம்.

Protest Against CAB
Protest Against CAB
AP Photo/Anupam Nath

ஆனால், இந்த மசோதாவை இன்னொருமுறை மேலோட்டமாக படித்தாலே `இந்தியாவின் மதச்சார்பின்மை' அடிபட்டுப்போவதை நன்கு உணரமுடிகிறது. அதுவும் அஸ்ஸாமில் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவந்த என்.ஆர்.சி விவகாரத்தையும், இதில் விடுபட்டுப்போன `இஸ்லாமியர்கள்' என்ற வார்த்தையையும் இணைத்துப் பார்த்தாலே இந்த மசோதாவிற்குப் பின்னிருக்கும் ஆபத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது இன்றைய நிலவரம். ஆனால் மோடி, அமித் ஷாவின் முன்னோடியான அத்வானி ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Ananda Vikatan Wrapper 25/11/1990
Ananda Vikatan Wrapper 25/11/1990
Vikatan Archives

1990-ல் ஆனந்த விகடனுக்கு அத்வானி அளித்த பேட்டியிலிருந்து...

``இந்தியாவில் இந்துக்கள் அல்லாதவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதாவின் கொள்கையா?"

``1947-க்குப் பின்பு, இந்து - முஸ்லிம் என்று மதங்களின் அடிப்படையில்தான் நாடு பிளவுபட்டது. அப்போது பாகிஸ்தான் தன்னை ஓர் இஸ்லாமிய நாடு என்று பிரகடனப்படுத்திக் கொண்டது. முஸ்லிம்களை முதல் தரக் குடிமக்கள் என்றும், முஸ்லிம் அல்லாதவர்களை இரண்டாம் தரக் குடிமக்கள் என்றும் அறிவித்தது. அதனால் நூற்றுக்கணக்கில் இந்துக்கள் அங்கே கொல்லப்பட்டார்கள். பல லட்சம் பேர் வீடு இழந்தார்கள். இருந்தாலும், அப்போது இந்தியா தனது அரசியல் சட்டத்தை அறிவித்தபோது, தன்னை மதச்சார்புள்ள நாடாக அறிவித்துக்கொள்ளவில்லை. மக்களையும் அவர்களின் மத நம்பிக்கையையும் வைத்து உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று இந்தியா ரகம் பிரிக்கவில்லை. ஆகையால், இந்தியா 1947-லேயே வேண்டாம் என்று தள்ளிய முறையை நாங்கள் ஒருபோதும் கொண்டு வரமாட்டோம். அதே சமயம், மதச்சார்பின்மை என்ற பெயரால் சிறு பான்மையினருக்கு மட்டும் தனியாக அதிகச் சலுகைகளைக் கொடுப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், மதச்சார்பின்மையில் அனைவரும் சமம்!"

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியா 'இந்து நாடு' என்று அறிவிக்கப்பட்டு விடுமோ?

  • தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வேரூன்றுமா?

இந்தக் கேள்விகளுக்கு அத்வானி என்ன பதில் சொல்லியிருப்பார்..! தெரிந்துகொள்ள... http://bit.ly/2shJxPo