Election bannerElection banner
Published:Updated:

``இன்று எங்களுக்கு தீபாவளி; அ.தி.மு.க டெபாசிட் இழக்கும்” - எல்.கே.சுதீஷ் ஆவேசம்

தே.மு.தி.க சுதீஷ்
தே.மு.தி.க சுதீஷ்

தொகுதி உடன்பாடு எட்டாத நிலையில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க வெளியேறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

தொகுதி உடன்பாடு எட்டாத நிலையில் அ.தி.மு.க உடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது தே.மு.தி.க.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், ``அ.தி.மு.க-வுடன் நடைபெற்ற மூன்றுகட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதுமுள்ள தொண்டர்கல் தங்கள் கருத்தை தலைவர் விஜயகாந்த்திடம் தெரிவித்தனர். அதனால் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக முடிவெடுக்கப்படுள்ளது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ``நாங்கள் கேட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதியும், எம்.பி தொகுதியும் கிடைக்காத காரணத்தாலும், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க வெளியேறுவதாகத் தலைவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எங்கள் தொண்டர்களைப் பொறுத்தவரை இன்று தீபாவளி. கண்டிப்பாகத் தமிழகத்தில் அ.தி.மு.க தோல்வியைத் தழுவும். அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசி இழக்கும்" என்றார் ஆவேசமாக.

மேலும், ``அ.தி.மு.க-வின் கே.பி.முனுசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்லீப்பர் செல்லாக அ.தி.மு.க-வில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். பா.ம.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராக அ.தி.மு.க-வில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்" என்று பேசினார்.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக மீண்டும் கலந்தாலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் துணைச் செயலாளர் பார்த்த சாரதி தெரிவித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு