Published:Updated:

`பாஜக-வில் இணைய வேண்டும் என்பது சிறுவயது கனவு!' - சொந்த ஊரில் நெகிழ்ந்த எல்.முருகன்

கோ பூஜையில் எல்.முருகன்
கோ பூஜையில் எல்.முருகன்

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், கடந்த 16 -ம் தேதி முதல், மக்களைச் சந்தித்து ஆசிபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவருகிறார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பிறாகு, எல்.முருகன் சொந்த ஊர் விசிட், குலதெய்வக் கோயில் தரிசனம், பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

கோ பூஜையில் எல்.முருகன்
கோ பூஜையில் எல்.முருகன்
`இதை வாங்க அதிகாரம் இல்லை!' - தமிழக அரசின் கடனை அடைக்க செக் கொடுத்த நபர்; திருப்பி அனுப்பிய ஆட்சியர்

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், கடந்த 16 -ம் தேதி முதல், மக்களைச் சந்தித்து ஆசிபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவருகிறார். 16-ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து, அவர்களிடம் ஆசிபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அவரோடு, மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பயணிக்கிறார். தொடர்ந்து, 17-ம் தேதி இரவு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பொதுமக்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து, 18-ம் தேதி பரமத்தி வேலூர் அருகேயுள்ள வாழவந்தி ஆர்.புதுப்பாளையத்திலுள்ள தன்னுடைய குலதெய்வக் கோயிலுக்கு எல்.முருகன் வருகை தந்தார்.

அங்கு பெருமாள்சாமியை தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற கோ பூஜையில் கலந்துகொண்டார். பசுமாட்டுக்குப் பல்வேறு வகையான பொருள்களைக் கொடுத்து வழிபாடு செய்தார்.

கோ பூஜையில் எல்.முருகன்
கோ பூஜையில் எல்.முருகன்

இந்த கோ பூஜையிலும், அண்ணாமலை, சி.பி.ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் கலந்துகொண்டனர். தொடர்ந்து, கந்தம்பாளையம் அருகேயுள்ள தனது சொந்த ஊரான கோனூருக்குச் சென்று, தன்னுடைய பெற்றோரைச் சந்தித்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றார். அதோடு, அவர் படித்த அரசுப் பள்ளிக்கும் சென்று, அங்கு பனைவிதைகளை விதைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து, நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் ஆசி யாத்திரை பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் பேசினார். அப்போது அவர், ``நாடு முழுவதும் புதிதாகப் பொறுப்பேற்ற 43 மத்திய அமைச்சர்களும், பிரதமர் மோடி உத்தரவின் பேரில் தங்களது மாநிலங்களுக்குச் சென்று, மக்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றுவருகின்றனர். அந்த அடிப்படையில், நான் தமிழகத்தில் மூன்று நாள் யாத்திரைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். இதன் மூலம், அனைத்து மக்களையும் சந்தித்து, ஆசி பெற்றுவருகிறேன். பிரதமர் மோடி ஏழை, எளிய மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார். பாஜக-வில் இணைய வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. அந்த விருப்பம் இப்போது படிப்படியாக நிறைவேறியிருக்கிறது.

மரக்கன்று நடும் எல்.முருகன்
மரக்கன்று நடும் எல்.முருகன்

அதற்கு முக்கியக் காரணம், வழக்கறிஞர் மனோகரனும், அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும்தான். நாமக்கல் மாவட்டத்தில் பா.ஜ.க வளர்ச்சியடைந்துள்ளது. இது, மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை கிராமப்புற மக்களுக்குச் சொந்த வீடு கட்டுவது என்பது எட்டாக்கனியாக இருந்தது. கழிவறை கட்டுவதற்கே மிகவும் சிரமப்பட்டுவந்தனர். ஆனால், தற்போது பிரதமர் மோடி ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கிவருகிறார்" என மத்திய அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டார்.

எல்.முருகன்: `செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் நான்!' - மத்திய அமைச்சர் கண்ணீர்
விகடன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் `ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரின் Promo...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு