Published:Updated:

தமிழகத்தில் வரும் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்! - மாநில தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வரும் 29-ம் தேதி சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

`தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும்’ எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜனவரி 28-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 5-ம் தேதி அன்று வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும் என்றும், பின்னர் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுதல் பிப்ரவரி 7-ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும். பின்னர் பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வரும் 29-ம் தேதி சனிக்கிழமை அன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனத் தேர்தல் மாநில ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!