நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அதிகமான வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது. இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், ``நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளாட்சியில் பெண்களுக்குத் தரப்பட்ட ஒதுக்கீட்டால், சமூகத்தில் சரிபாதி பெண்கள் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள். இது திராவிட மாடல் புரட்சியாகும்.
கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பும் பிரசாரமும் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன. தி.மு.க-வினர் எந்தப் புகாரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படிப் புகார் வந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவல் காரணமாக, காணொலி பிரசாரம் நடந்தது. இதன் பிறகு மக்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த ஒன்பது மாதகால தி.மு.க ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்று இந்த வெற்றிதான். திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது. வெற்றி கண்டு கர்வம் கொள்ளவில்லை. தி.மு.க மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை 100 சதவிகிதம் காப்பாற்றுவோம். தி.மு.க வேட்பாளர்கள் அனைவரும் மக்களுக்காக உண்மையாக உழைக்க வேண்டும். மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்க வேண்டும்" என்றார்.