Published:Updated:

ம.பி:``ராமரும் அனுமனும் பாஜக கட்சிக்காரர்கள் அல்ல" - முன்னாள் முதல்வர் உமா பாரதி

உமா பாரதி

``மற்றவர்கள் யாரும் ராமர், அனுமனின் பக்தர்களாக இருக்க முடியாது என்ற தவறான கருத்தை பாஜக கொண்டிருக்கக் கூடாது." - உமா பாரதி

ம.பி:``ராமரும் அனுமனும் பாஜக கட்சிக்காரர்கள் அல்ல" - முன்னாள் முதல்வர் உமா பாரதி

``மற்றவர்கள் யாரும் ராமர், அனுமனின் பக்தர்களாக இருக்க முடியாது என்ற தவறான கருத்தை பாஜக கொண்டிருக்கக் கூடாது." - உமா பாரதி

Published:Updated:
உமா பாரதி

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் சூழலில், மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான உமா பாரதி, ``நான் பா.ஜ.க-வின் விசுவாசமான தொண்டர். எப்போதும் நான் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிப்பேன். ஆனால், பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள் என்ற என்னுடைய வேண்டுகோளை நீங்கள் ஏற்கவேண்டிய அவசியமில்லை" என மூன்று நாள்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். இந்த நிலையில் அதே உமா பாரதி தற்போது பா.ஜ.க-வுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.

உமா பாரதி
உமா பாரதி

மீண்டுமொருமுறை சொந்தக் கட்சியை மறைமுகமாகத் தாக்கிய உமா பாரதி, ``தெய்வங்கள் எந்த மதத்துக்கும் சாதிக்கும் கட்டுப்பட்டவையல்ல. ஜன சங்கம் அல்லது முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு முன்னிருந்தே தெய்வங்கள் இருக்கின்றன. ராமரும் அனுமனும் பா.ஜ.க-வின் கட்சிக்காரர்களும் அல்ல. அதோடு மற்றவர்கள் யாரும் ராமர், அனுமனின் பக்தர்களாக இருக்க முடியாது என்ற தவறான கருத்தை பாஜக கொண்டிருக்கக் கூடாது" எனக் கூறினார்.

உமா பாரதி - ராகுல் காந்தி
உமா பாரதி - ராகுல் காந்தி

அதேசமயம் பாரத் ஜோடோவைக் குறிவைத்து காங்கிரஸையும் விமர்சித்த உமா பாரதி, ``ராகுலை நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். இந்தியாவை எங்கே அவர் துண்டு துண்டாகப் பார்க்கிறார். நாட்டை காங்கிரஸ் பிரித்தபோதுதான், இந்தியா ஒரேயொருமுறை துண்டாடப்பட்டது. உண்மையிலேயே காங்கிரஸ் இந்தியாவை ஒருங்கிணைக்க விரும்பினால், பிரிவினைக்கு முன்பு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பகுதிகளை இணைப்பது பற்றிப் பேச வேண்டும்" என்று தெரிவித்தார்.