Published:Updated:

"ராமர் இந்துக்களின் கடவுள் மட்டுமல்ல; அவர் அல்லாவால் அனுப்பிவைக்கப்பட்டவர் "- ஃபரூக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா

``பா.ஜ.க., வாக்குச் சேகரிப்பதற்காகவே ராமரின் பெயரைப் பயன்படுத்துகிறது.'' - ஃபரூக் அப்துல்லா

Published:Updated:

"ராமர் இந்துக்களின் கடவுள் மட்டுமல்ல; அவர் அல்லாவால் அனுப்பிவைக்கப்பட்டவர் "- ஃபரூக் அப்துல்லா

``பா.ஜ.க., வாக்குச் சேகரிப்பதற்காகவே ராமரின் பெயரைப் பயன்படுத்துகிறது.'' - ஃபரூக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா நேற்று உள்ளூர் கட்சி நடத்திய விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பா.ஜ.க வாக்குச் சேகரிப்பதற்காகவே ராமரின் பெயரைப் பயன்படுத்துகிறது. மக்களுக்குச் சரியான பாதையை காட்டவே இறைவன் ராமரை, அல்லா அனுப்பியிருக்கிறார். பா.ஜ.க தான் மட்டுமே ராமரின் பக்தர்கள் என்று காட்டிக்கொள்கிறது. இப்படிச் செய்து தற்போது அதிகரித்துவரும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை மக்களிடமிருந்து மறைக்கப் பார்க்கிறது. 

பரூக் அப்துல்லா
பரூக் அப்துல்லா

மேலும், ராமர் இந்துக்களின் கடவுள் மட்டுமல்ல என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். கடவுள் ராமர் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பிற மதத்தினர் என அனைவருக்கும் பொதுவானவரே. அதுபோல அல்லாவும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான கடவுள். நாங்கள் மட்டுமே ராம பக்தர்கள் என்று சொல்பவர்கள் முட்டாள்கள். அவர்கள் ராமரை விற்க மட்டுமே விரும்புகிறார்கள், அவர்களுக்கு ராமர் மீது எந்தவிதப் பாசமும் இல்லை. அவர்களுக்கு அதிகாரத்தின் மீது மட்டுமே பாசம் இருக்கிறது'' என்றார்.