Published:Updated:

தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு - சி.ஏ.ஜி ரிப்போர்ட் சொல்வது என்ன?!

சி.ஏ.ஜி

பல்வேறு திட்டங்கள் தாமதமாக தொடங்கப்பட்டதையும், வேளாண்துறைக்காக வாங்கப்பட்ட இயந்திரங்களும் பயன்படுத்தப்படாமல் அலுவலகங்களில் குப்பைகளாக போடப்பட்டுள்ளதையும் தணிக்கை அறிக்கை குறிப்பிட்டுகாட்டுகிறது. 

தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு - சி.ஏ.ஜி ரிப்போர்ட் சொல்வது என்ன?!

பல்வேறு திட்டங்கள் தாமதமாக தொடங்கப்பட்டதையும், வேளாண்துறைக்காக வாங்கப்பட்ட இயந்திரங்களும் பயன்படுத்தப்படாமல் அலுவலகங்களில் குப்பைகளாக போடப்பட்டுள்ளதையும் தணிக்கை அறிக்கை குறிப்பிட்டுகாட்டுகிறது. 

Published:Updated:
சி.ஏ.ஜி

தமிழக சட்டமன்றத்தில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் முக்கியமாக கூறப்பட்டுள்ள சில தணிக்கைகள்:

உயர்கல்வித்துறை

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலராக செயல்பட்ட உமா, பல்வேறு முறைகேடுகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் பணியில் இருந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கான சான்றிதழ்களை டிஜிட்டல் மயம் ஆக்குவதற்கு தகுதியற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை கொடுத்தத்தை தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, அரசுக்கு 11 கோடியே 41 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய மாணவர்களின்  சான்றிதழ்களின் எண்ணிக்கை 7,33,720 தான். ஆனால் 20,92,035 சான்றிதழ்கள் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டதாக போலியாக கணக்கு காட்டப்பட்டு, குறிப்பிட்ட சில தனியார் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் தரச் சான்றிதழ், தற்காலிகச் சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், பட்டயச் சான்றிதழ் ஆகியவற்றை அச்சிடுவதற்காக வாங்கப்பட்ட வெற்று சான்றிதழ்களிலும் முறைகேடுகள் நடத்திருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

கடந்த 2016-ம் ஆண்டு தேவைப்படும் 17,15,441 சான்றிதழ்களுக்கு பதிலாக  1,63,30,000  வெற்று சான்றிதழ்கள் 57 கோடி ரூபாய்க்கு அச்சிடப்பட்டுள்ளது. அதன்படி, 24.50 கோடி மதிப்பிலான சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட முடியவில்லை.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

அதேபோல, மதுரை காமராஜர் பல்கலையில், தரமற்ற டிஜிட்டல் பாட தயாரிப்பால், 10.70 கோடி ரூபாய் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவானது, சிண்டிகேட் குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதோடு, டெண்டருக்கான எந்த விதிகளையும் பல்கலைக்கழகம் பின்பற்றவில்லை. குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பாக அரசின் விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை என்று அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

*கரூர், தேனி, திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விடுதிகள் செயல்பட போதிய முன்முயற்சிகள் இல்லாததால் ரூ.6.64 கோடி பயனற்ற செலவினம்.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டு நலன்

*72 மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 31,152  மாணவர்களுக்கான சீருடை வழங்குவதில் ரூ.4.13 கோடியும், 49 மாதிரி பள்ளிகளில் 21,086 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடை என மொத்தம் ரூ ரூ.6.38 கோடி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது.

* மதுரையில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையத்தை உருவாக்க தவறியதால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.2.27 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடம் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது. மேலும், ஓராண்டுக்கும் மேலாக ரூ.2.73 கோடி வங்கிக்கணக்கில் முடக்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறை

*தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர்களால் கொள்முதல் நடைமுறை மீறல் நடவடிக்கை மற்றும் உள்கட்டுப்பாடுகளின் தோல்வி காரணமாக ரூ.3.22 கோடி வீண் செலவு செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் 106 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டு தங்குமிடங்களுக்கான தேவை மதிப்பீடு ஆய்வு மேற்கொள்ளாமலும் கட்டட அமைப்பாளர்களுடன் இணைந்து செயல்படாமலும் கட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து இன்னும் பயன்பாட்டுக்கு வரைவில்லை என்பதால் அரசுக்கு 31.66 கோடி ரூபாய் பயனற்ற செலவு.

* மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், நீர்ப்பாசனத் குளங்கள் செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் ஆகியவற்றுக்காக திட்டத்தை விரைவாக செயல்படுத்தாதல் மற்றும் சரியாக திட்டமிடாததால், மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய ரூ.29.95 கோடி கிடைக்கப்பெறவில்லை.

*ஒக்கி புயலில்போது நடைபெற்ற கட்டுமானப் பணிகளை இயற்கை பேரழிவுகளுக்கு எதிரான காப்பீடு செய்ய ஒப்பந்தகாரர்கள் தவறியது மற்றும் ஒப்பந்த நிபந்தனையை தள்ளுபடி செய்ததன் விளைவாக, அரசுக்கு ரூ.3.15 கோடி கூடுதல் செலவு.

*வேலூர் மாவட்டத்தில் உழவர்களுக்கு நெல் விதைகளை தேவைக்கு ஏற்ப வழங்காததால், கூடுதலாக 590 மெட்ரிக் டன் நெல் விதைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.1.33 கோடி கூடுதல் செலவு.

தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு - சி.ஏ.ஜி ரிப்போர்ட் சொல்வது என்ன?!

* காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டால் எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் பொருத்துவதற்கான இடத்தை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், வீணாக ரூ.1.12 கோடி செலவிடப்பட்டுள்ளது.

* திருச்சி அருகே கள்ளிக்குடியில் ரூ.77.04 கோடி செலவில் கட்டப்பட்ட மத்திய வணிக வளாகம் முறையற்ற திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் உரிய நிலம் அடையாளம் காணப்படுவதில் உள்ள குறைபாடுகளால் 4 ஆண்டுகளாக பயன்படுத்தப்படமால் உள்ளது.

மேலே குறிப்பிட்ட இந்த தணிக்கை முடிவுகள் என்பது கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கானது. அந்த காலக்கட்டத்தில் திட்டம் தாமதமாக தொடங்கப்பட்டத்தையும், வேளாண்துறைக்காக வாங்கப்பட்ட இயந்திரங்களும் பயன்படுத்தப்படாமல் அலுவலகங்களில் குப்பைகளாக போடப்பட்டுள்ளதையும் தணிக்கை அறிக்கை குறிப்பிட்டுகாட்டுகிறது.