Published:Updated:

கோவை: சாலை விபத்துக்கு வழிவகுக்கும் பார்க்கிங் டிவைடர்கள்! - கவனிப்பார்களா அதிகாரிகள்?

கோவை
News
கோவை

உடைந்து கிடக்கும் இந்த டிவைடர்கள் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆர்.எஸ்.புரம் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு முடியும் நிலையில் இருக்கின்றன. ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட சாலைகளில் மிகவும் தரமற்ற பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பார்க்கிங் டிவைடர் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பிளாஸ்டிக் டிவைடர் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே வாகனங்கள் மோதியதில் நொறுங்கிவிட்டன. மேலும், இந்த பார்க்கிங் டிவைடர்கள் சாலையின் அகலத்தைக் குறைத்து விடுவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். ஆர்.எஸ்.புரத்தில் அமைக்கப்பட்ட பெரும்பாலான பார்க்கிங் டிவைடர்கள் நொறுங்கியதால் அவை அகற்றப்பட்டன. ஆனால், தொண்டாமுத்தூர் சாலையில் அமைக்கப்பட்ட டிவைடர்கள் வாகனங்கள் மோதியதில் உடைந்து நொறுங்கி அப்படியே கிடக்கின்றன.

கோவை
கோவை

இதனால், வாகன ஓட்டிகள் அதில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. உடைந்து கிடக்கும் இந்த டிவைடர்கள் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அதேபோல, இந்த பகுதியில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்காக பார்க்கிங் டிவைடர்கள் மீது ஏற்றும்போது வண்டியின் டயர் பஞ்சர் ஆகிவிடுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இந்த பார்க்கிங் டிவைடர்களால் சில விபத்துகளும் நிகழ்ந்திருக்கின்றன. அதனால், பொதுமக்களே அவற்றைப் பிடுங்கி அப்புறப்படுத்தி வருகின்றனர். அதிகாரிகள், பயனற்ற இந்த டிவைடர் போஸ்ட்டுகளை உடனடியாக அகற்றிட வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கோவை
கோவை

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், ``இந்த மாதிரி பார்க்கிங் டிவைடர் போஸ்ட் எல்லாம் வெளிநாட்டில் தான் பயன்படும். நம்ம ஊர் சாலைகளுக்கு செட்டாகாது. இதனால, நெறைய விபத்துகள் வேற ஏற்படுது. மக்களோட வரிப்பணம் இப்படி வீணாகுறத நினைச்சா கஷ்டமா இருக்கு. அதிகாரிங்க உடனடியா இந்த விஷயத்துல நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

கோவை
கோவை

சாலை விபத்துகளுக்கு வித்திடும் இத்தகைய டிவைடர் போஸ்ட்டுகளை அகற்றிவிட்டு, நல்ல தரமான பிளாஸ்டிக் அல்லாத டிவைடர்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.