Published:Updated:

``சாலைகள் நன்றாக இருப்பதால், அதிவேகத்தில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கின்றன" - பாஜக எம்.எல்.ஏ

பாஜக எம்.எல்.ஏ நாராயண் படேல்

``சாலைகள் நன்றாக இருப்பதால், வாகனங்கள் அதிக வேகத்தில் ஓடுவதால் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் இருக்கிறது. இதை நானே அனுபவித்திருக்கிறேன்." - பாஜக எம்.எல்.ஏ நாராயண் படேல்

மத்தியப் பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், சாலைகள் நன்றாக இருப்பதால் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழப்பதாகக் கூறியிருப்பது பலரிடையே விவாதமாக மாறியிருக்கிறது.

சாலை விபத்து
சாலை விபத்து

பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலத்தில் அதிகரித்துவரும் சாலை விபத்துகள், மோசமான சாலைகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பா.ஜ.க எம்.எல்.ஏ நாராயண் படேல், ``என்னுடைய தொகுதியில் சாலை விபத்துகள் அதிகரித்துவருகின்றன. சாலைகள் நன்றாக இருப்பதால், வாகனங்கள் அதிக வேகத்தில் ஓடுவதால் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது. இதை நானே அனுபவித்திருக்கிறேன்.

பாஜக எம்.எல்.ஏ நாராயண் படேல்
பாஜக எம்.எல்.ஏ நாராயண் படேல்

அனைவரும் அல்ல, சில ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன" என்று கூறினார்.

பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 2017-ம் ஆண்டு தன்னுடைய அமெரிக்க பயணத்தின்போது, மத்தியப் பிரதேசத்திலுள்ள சாலைகள் அமெரிக்காவை விடச் சிறப்பாக இருப்பதாகக் கூறியிருந்தார். இருப்பினும் சாலை விபத்துகள் குறித்த கேள்விக்கு பாஜக எம்.எல்.ஏ இவ்வாறு கூறியிருப்பது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.