Published:Updated:

தமிழக மக்களுக்கு `மதுரை எய்ம்ஸ்’ எட்டாக் கனியா... திமுக, பாஜக என்ன சொல்கிறது?!

மதுரை எய்ம்ஸ்

``2014ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை 8 மாநிலங்களில் மத்திய அரசின் சொந்த நிதியில் எய்ம்ஸ் மருத்துவமனைகளைக் கட்டிவிட்டனர்.”

தமிழக மக்களுக்கு `மதுரை எய்ம்ஸ்’ எட்டாக் கனியா... திமுக, பாஜக என்ன சொல்கிறது?!

``2014ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை 8 மாநிலங்களில் மத்திய அரசின் சொந்த நிதியில் எய்ம்ஸ் மருத்துவமனைகளைக் கட்டிவிட்டனர்.”

Published:Updated:
மதுரை எய்ம்ஸ்

'எய்ம்ஸ் மருத்துவமனை' என்று சொன்னாலே இப்போதெல்லாம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தான் நமக்குச் சட்டென  நியாபகத்துக்கு வருகிறது. அந்த அளவிற்கு மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனையைச் சுற்றிய சர்ச்சைகளும், நீதிமன்ற வழக்குகளும் வரிசைகட்டி நிற்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மதுரை வந்திருந்த பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா மதுரை  எய்ம்ஸ் பணிகள் 94 சதவீதம் முடிந்துவிட்டது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், கோப்பு பணிகள் தான் முடிந்துவிட்டதாகக் கூறினேன் என்று விளக்கமளித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் அதிருப்தி தெரிவித்திருந்தது. 

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரையில் கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் இடத்தேர்வு நடைபெற்றது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர், மதுரை அருகே தோப்பூரில் மருத்துவமனையைக் கட்டுவதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த மருத்துவமனை ரூ.1,264 கோடி மதிப்பில், சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று, மற்ற பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதற்கு போதிய நிதி மத்திய அரசிடமிருந்து வராததே காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல், கட்டாத  மருத்துவமனைக்குத் தலைவராக நாகராஜன் வெங்கட்ராமனை நியமித்ததும் சர்ச்சை உண்டாக்கியது.  

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்

இந்தச்சூழலில், மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி, பணியைத் துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். அப்போது, எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 36 மாதங்களில் முடிவடையும் என மத்திய அரசு தெரிவித்தது. இதைப் பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. ஆனால், மருத்துவமனை பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை என்றும், நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவித்த மத்திய அரசின் உயரதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மற்றொரு வழக்கை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மதுரை உயர்நீதிமன்றம்.
மதுரை உயர்நீதிமன்றம்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் குடும்பநல அமைச்சகம் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கட்டுமான பணிகள் முடிவதற்கு 5 வருடம் 8 மாதம் ஆகும். (2021 மார்ச் முதல் 2026 அக்டோபர் வரை). அதிக செலவு மற்றும் கூடுதல் காலத்துக்கான மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கப்பட்டு செலவினத்துறையின்  பரிசீலனையில் இருக்கிறது. இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர்  மற்றும் நிர்வாக துணை இயக்குநர் நியமிக்கப்பட்டுவிட்டனர். அரசு தரப்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், மேற்கண்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது  எனத் தெரிவிக்கப்பட்டது. 

எய்ம்ஸ்
எய்ம்ஸ்

பின்னர் மனுதாரர் தரப்பில், `2014-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 8 மாநிலங்களில் மத்திய அரசின் சொந்த நிதியில் எய்ம்ஸ் மருத்துவமனைகளைக்  கட்டிவிட்டனர். சமீபத்தில் இமாச்சலப்பிரதேசத்தில்  எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது?’. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், எந்த அடிப்படையில் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடியும் என்று தெரிவிக்கிறீர்கள்? அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளன என்ற நிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்
என்.ஜி.மணிகண்டன்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல், குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டத்தை முடிக்காத நிலையில் ரூ.700 கோடிக்கு மேல் கூடுதல் செலவினம் ஏற்பட்டிருப்பதாகவும், இது வரக்கூடிய காலங்களில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ராஜீவ் காந்தி -
ராஜீவ் காந்தி -

இதுகுறித்து, தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி , "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை' அறிவிப்பு வெளியிட்ட போது வட இந்தியாவிலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பணிகள் முடிந்து செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால், இங்கே ஒரு சுவரைக் கூட எழுப்பவில்லை. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதி போதாது இன்னும் ரூ.2 ஆயிரம் கோடியாவது ஒதுக்க வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால், சொற்ப அளவிலேயே நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். 2026-ல் பணிகள் முடிக்கப்படும் என்று மத்திய அரசு சொல்கிறது. அப்போதைய காலகட்டத்தில் தற்போது ஒதுக்கிய நிதியை விடக் கூடுதல் நிதி செலவாகும். இப்போதிருக்கும் நிதியை வைத்து  உடனடியாக பணிகளை ஆரம்பித்து முடிக்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் மீதான அக்கறையின்மை தான் இந்த தாமதத்திற்குக் காரணம். தி.மு.க அரசு கிண்டி கிங்ஸ் மருத்துவமனை அறிவிப்பை வெளியிட்டு ஒரு ஆண்டு தான் இருக்கும். ஆனால், இப்போது பணிகள் முழுமையாக முடிவடையப்போகிறது" என்றார்.  

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

தமிழக பா.ஜ.க துணைத் நாராயணன் திருப்பதி, "2015ல் இந்த திட்டத்தை அறிவித்தபோது திட்டமதிப்பீடு ரூ.1,200 கோடி. தோப்பூரில் இடத்தேர்வு 2018ல் தான் நடந்தது. அதன்பின்னர், 2021ல் ரூ.777 கோடி கூடுதலாக அறிவித்திருக்கிறார்கள். இந்த கூடுதல் நிதி என்பது 2026 வரையில் அதாவது 5 வருட காலதாமதத்திற்கும் சேர்த்து தான். ஒருவேலை காலத்திற்கேற்ப மாறினாலும் அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கும். 2026க்குள் பணிகளை முடிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது" என்று முடித்துக்கொண்டார்.