Published:Updated:

பத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள்! - ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

பத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் செயல்பாடுகள், ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள், அந்தத் திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பத்திரிகைகளில் எழுதியதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் கிரிமினல் அவதூறு வழக்குகள் பதியப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் அரசாங்கத்தை விமர்சனம் செய்து பேசியதை, செய்தியாக பத்திரிகைகள் வெளியிடும்போது, அதற்கும் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

பேட்டி, செய்தி கொடுக்கும் அரசியல் கட்சியினருக்கு எதிராக வழக்கு தொடரும்போது, அவர்களின் பேச்சுகளைப் பிரசுரிக்கும் பத்திரிகை நிறுவனங்கள், செய்தி ஆசிரியர்கள், கட்டுரை ஆசிரியர்கள், செய்தியாளர்களையும் சேர்த்தும் அரசு வழக்கு தொடர்ந்து வந்தது.

தமிழக அரசு
தமிழக அரசு

இப்படி கிரிமினல் அவதூறு வழக்குகளைச் சந்திக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தங்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, தி இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஆங்கில நாளிதழ்கள் மற்றும் நக்கீரன், முரசொலி ஆகிய தமிழ் செய்தி நிறுவனங்களுக்கு எதிரான 28 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஷ், செய்தி நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

``அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு!” - அவதூறு வழக்கை ரத்து செய்ய ஸ்டாலின் மனு
அடுத்த கட்டுரைக்கு