Published:Updated:

``தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி!" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

``கோவை மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய ஆறு இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி." - சென்னை உயர் நீதிமன்றம்

``தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி!" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

``கோவை மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய ஆறு இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி." - சென்னை உயர் நீதிமன்றம்

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில், காந்தி ஜெ=யந்தியை முன்னிட்டு பேரணி நடத்த அனுமதி கோரியிருந்த ஆர்.எஸ்.எஸ்-ஸின் கோரிக்கைக்கு, `சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது' என காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ்-ஸின் பேரணிக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

பின்னர் இது தொடர்பாக நவம்பர் 2-ம் தேதி நடந்த விசாரணையில், பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்த 50 இடங்களில், 3 இடங்களில் மட்டுமே பேரணி நடத்தலாம் என அரசு அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் தரப்பு, வி.சி.க-வின் பேரணி எண்ணிக்கையைக் காரணம் காட்டி இதை ஏற்க மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து வழக்கு நவம்பர் 4-ம் (இன்று) தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், தமிழ்நாட்டில் மொத்தம் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதாவது, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய ஆறு இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கலாம் என்று உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருக்கிறது. மேலும், நீதிபதிகள் குறிப்பிட்ட ஆறு இடங்களில் இயல்புநிலை திரும்பும் வரை ஆர்.எஸ்.எஸ் காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதோடு, காவல்துறை தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுவதுமாக ஆராயப்பட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.