Published:Updated:

`கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்?’; `தகவல்கள் இல்லை’ - ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அமைச்சகம் பதில்

மதுரை எய்ம்ஸ்

2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ்க்கு ஜூன் 2018-ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வுசெய்யப்பப்பட்டது. 6 மாதங்கள் கழித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

`கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்?’; `தகவல்கள் இல்லை’ - ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அமைச்சகம் பதில்

2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ்க்கு ஜூன் 2018-ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வுசெய்யப்பப்பட்டது. 6 மாதங்கள் கழித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

Published:Updated:
மதுரை எய்ம்ஸ்

அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், `மதுரை எய்ம்ஸ் திட்ட மேலாண்மை நிறுவனம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என்றும், `எப்போது தொடங்கும் எனத் தெரியாது’ என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு கொடுத்திருக்கும் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்

சமீபகாலமாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்படும் என்பது காமெடியாகிவருகிறது. இந்த நிலையில் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு 90 சதவிகிதம் நிதி ஒதுக்கி பூர்வாங்கப் பணிகள் முடிந்துவிட்டதாக கடந்த மாதம் மதுரைக்கு வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தது பரபரப்பை உண்டாக்க, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு எம்.பி-க்கள் மாணிக்கம் தாகூரும், சு.வெங்கடேசனும் சென்று 'கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணோம்' என்று கிண்டல் செய்ய, அதற்கு பா.ஜ.க-வினர் விளக்கமளிக்க என்று தமிழக அரசியல் களமே பரபரப்பானது.

2015-ம் ஆண்டு, பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸுக்கு ஜூன் 2018-ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2019  நாடாளுமன்றத் தேர்தல்  நெருங்கிய நேரத்தில் 27.01.2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. மார்ச் 2021-ல் கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான தற்காலிக வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தில் எம்.பி-க்கள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தில் எம்.பி-க்கள்

தற்போது எய்ம்ஸ் கட்டுமான நிலை குறித்து, தென்காசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா கேட்ட ஆர்.டி.ஐ கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அளித்த பதிலில், "திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அக்டோபர் 2026-ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடியும். கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் இல்லை. மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான 1977.8 கோடியில், 82 சதவிகிதமான 1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைய்கா நிறுவனம் வழங்கும். 20 சதவிகிதத் தொகையான ரூ 350.1 கோடியை மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் வழங்கும். சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் உட்பட முதலீட்டுக்கு முந்தைய பணிகள் 92 சதவிகிதம் முடிவடைந்திருக்கின்றன. அதற்காக ரூ 12.35 கோடி தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய பாண்டியராஜா, ``தமிழ்நாட்டுக்குப் பிறகு மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளெல்லாம் திறப்புவிழா கண்டுவருகின்றன. ஆனால், மதுரை எய்ம்ஸுக்கு மட்டுமே காரணங்கள் கூறப்பட்டு, தாமதிக்கப்பட்டு வருகிறது.

பாண்டியராஜா
பாண்டியராஜா

நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து என்று காலம் தாழ்த்தப்பட்ட நிலையில், தற்போது திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்தல், வரைபடம் தயாரித்தல், கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்தல் என இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்பது மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே, மேலும் காலதாமதம் செய்யாமல் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ஜனவரி 2019-ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.