கர்நாடகாவில் தொடங்கி நாடுமுழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆவேசமாகப் பேசினார்.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், ``கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதை முன்வைத்து நடைபெறும் வெறுப்பு அரசியலால், கலந்துரையாடி சமூகமயமாக வேண்டிய மாணவ சமூகம் கூறுபோடப்படுகிறது. யாருடைய உத்தரவின் பேரில் ஹிஜாப் அணிவதும், கிரீடம் அணிவதும் நடக்க வேண்டும்? பள்ளிக்குழந்தைகள் என்ன நாடகம் போட வேண்டும்? என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை உத்தரவிட இவர்கள் யார்? அரியலூர் மாணவி மரணத்தில் மதமாற்றம் இருக்குமோ? என அவசரமாக மத்திய அரசின் தேசிய குழந்தைகள் ஆணையம் தமிழ்நாட்டுக்கு விரைகிறது.

ஆனால், கர்நாடகத்திற்கு இதுவரை எந்த ஆணையமும் விரையவில்லையே ஏன்? சிறார்கள் மூலம் நடத்திய நாடகத்திற்கு உடனே தலையிட்ட மத்திய அரசு, அந்த விவகாரம் தொடர்பாக பேச நாடாளுமன்றத்தில் நேரம் ஒதுக்க மறுப்பது ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`துண்டு துணியை வைத்து எங்கள் கல்வியைப் பறிக்காதீர்கள்... என் சகமாணவர்களை தண்டிக்க வேண்டாம். அவர்கள் செய்தது தவறு என உணர்ந்தால் போதும்' எனக் கூறிய மாணவி முஸ்கானின் வார்த்தை மதவெறியை மண்டியிடச்செய்யும் வார்த்தை. இது ராமனின், முஹம்மது நபியின், இயேசுவின் வார்த்தை" எனக் குறிப்பிட்டார்.