Published:Updated:

``உத்தரப்பிரதேசத்துக்கு ஒரு நியாயம்... தமிழகத்துக்கு ஒரு நியாயமா?!" - சு.வெங்கடேசன் `சுளீர்' அறிக்கை

சு.வெங்கடேசன்
News
சு.வெங்கடேசன்

``எந்த அளவீடு, கட்டமைப்பு, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மூன்று சர்வதேச விமான நிலையங்கள் உ.பி-யில் தொடங்கப்படுகின்றன... எதன் அடிப்படையில் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன?" - சு.வெங்கடேசன்

`மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்' என்று தான் முன்வைத்த கோரிக்கையை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா முடியாது என்று மறுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக ஊடகத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அப்படி நான் கூறவில்லை என்று அமைச்சர் சிந்தியா டிவிட்டரில் விளக்கம் அளித்திருப்பது, மீண்டும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையம்

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் எம்.பி சு.வெங்கடேசன், ``மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை நானும், மாணிக்கம் தாகூரும் சந்தித்தபோது, அவர் பேசிய கருத்துகளை நாங்கள் வெளியிட்டது விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து அமைச்சர் சிந்தியா மீண்டும் டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் மிக்க மகிழ்ச்சி. என்னிடமும், மாணிக்க தாகூரிடமும் அவர் கூறியதையே ஊடகங்களுக்கு வெளியிட்டோம். தற்போது, நான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை, மிகுந்த அதிர்ச்சியாய் இருக்கிறது என்கிறார்.

ஜோதிராதித்யா சிந்தியா
ஜோதிராதித்யா சிந்தியா

ஏன் அதிர்ச்சி? எது உண்மையற்றது? முதலில் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் மாநிலங்கள் உண்டு என்கிறார். இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டுமெனில் அதன் பயணிகள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் வேண்டும், இன்னும் எத்தனை விமான நிலையங்களையும் திறக்க அரசு தயாராக இருக்கிறது என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்றாவதாக, மதுரையிலிருந்து ஏற்கெனவே சில சர்வதேச விமானங்கள் செல்கிறது. அப்படியிருக்க சர்வதேச விமான நிலையம் என்று அழைப்பதுதான் பிரச்சனையா? எனவும், கூடுதலாக சர்வதேச விமானங்களை இயக்குவதற்கு ஒத்துழைக்கிறோம் எனவும் அவர் சொல்கிறார். இவ்வளவு சொல்லும் அமைச்சர், மதுரையை சர்வதேச விமானநிலையம் ஆக்குவோம் என்று சொல்ல மறுக்கிறார். அதுதான் பிரச்னையே.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

சந்திப்பின்போது பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமானநிலையம் தான் இருக்கிறது. இரண்டாவது வேண்டுமென 5 மாநில முதல்வர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதும் செய்யவில்லை. ஏற்கெனவே தமிழகத்தில் 3 சர்வதேச விமானநிலையங்கள் இருக்க, நான்காவதாக மதுரையை அறிவிக்க வாய்ப்பே இல்லை என்பதை மிக அழுத்தமாக வாதிட்டார். அதைத்தான் தற்போதும் வேறுவகையில் கூறியிருக்கிறார். மதுரையிலிருந்து ஏற்கெனவே வெளிநாடுகளுக்கு விமானங்கள இயக்கப்படுகின்றன. அப்படியிருக்க அதை சர்வதேச விமானநிலையம் என அறிவிக்க வேண்டுமா? என கேட்கிறார். இதில் என்ன பிரச்னை? அறிவிக்க வேண்டியதுதானே என்றால் பதில் இல்லை.

அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூருக்கு மதுரையிலிருந்து விமானங்களை இயக்க முயற்சி செய்வதாக அமைச்சர் கூறிய செய்தியை உடனடியாக வெளியிட்டோம். அதை நாங்கள் மறுக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. ஆனால், அமைச்சர் தான் பேசிய சில விஷயங்களை மறுக்கிறார். சர்வதேச விமான நிலையம் எனில் அதற்கென அளவீடுகள் , ஒப்பந்தங்கள், அடிப்படைக் கட்டமைப்புகள், பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்புடையது என்கிறார். இதில்தான் பிரச்னை இருக்கிறது.

மத்திய அமைச்சர் சிந்தியாவை சந்தித்தபோது
மத்திய அமைச்சர் சிந்தியாவை சந்தித்தபோது

கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி, குஷிநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணப்பட்ட பன்னாட்டுப்பயணிகளின் எண்ணிக்கையை விட மூன்றுமடங்கு அதிகமாக மதுரையிலிருந்து பயணப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, நாடு முழுவதுமுள்ள 21 சர்வதேச விமான நிலையங்களில், 11-ல் பயணம் செய்த பன்னாட்டு பயணிகளின் எண்ணிக்கையை விட மதுரையிலிருந்து பயணம் செய்தவர்கள் அதிகம்.

அது மட்டுமல்ல, ஒன்றிய விமானத்துறை அறிவித்திருக்கும் 10 கஸ்டம்ஸ் விமான நிலையங்களில் பன்னாட்டுப் பயணிகள் அதிகம் பயணிக்கும் விமானநிலையமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது மதுரை. அதனால்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவியுங்கள் என்று கேட்கிறோம். நீங்களோ ஏதேதோ காரணம் சொல்கிறீர்கள்.

ஆனால் உ.பி-யில் 2021 அக்டோபரில் குஷிநகர் சர்வதேச விமானநிலையத்தை திறக்கிறீர்கள். நவம்பர் மாதம் நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறீர்கள். அடுத்த ஆண்டே அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கிறீர்கள். எந்த அளவீடு, கட்டமைப்பு, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மூன்று சர்வதேச விமானநிலையங்கள் உ.பியில் தொடங்கப்படுகின்றன? எதன் அடிப்படையில் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன?

மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையம்

வளர்ச்சி சார்ந்த மனிதவளக் குறியீடுகளில் முன்னணியில் இல்லாத மாநிலத்துக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை கொடுக்கும் நீங்கள், வளர்ச்சி சார்ந்த குறியீடுகளில் முதன்மையாகவும் , ஜிஎஸ்டி பங்களிப்பில் நாட்டிலேயே இரண்டாவதாக இருக்கும் தமிழகத்துக்கு ஏன் நியாயம் வழங்க மறுக்குறீர்கள்? அரசு இன்னும் எத்தனை விமான நிலையங்களையும் திறக்கத் தயாராக இருக்கிறது என்றும் கூறும் அமைச்சரே அதே வேகத்தோடு மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவியுங்கள். வரவேற்க தயாராக இருக்கிறோம். அதுவரை எங்கள் கோரிக்கைகள் தொடரும்.

நாங்கள் உண்மைக்கு மாறாக பேசவேண்டிய தேவையில்லை. தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன" என்று குறிப்பிட்டிருக்கிறார்.