Published:Updated:

`ஜெயலலிதா வாக்குறுதியை நிறைவேற்ற மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும்!' - பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

`தமிழின் தலைநகர் மதுரை. அதனால், மதுரையைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும்' என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க சார்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நெல்லையில் நடைபெற்றது. இதில், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

`இம்ரான் கான் போலவே பேசுகிறார் ஸ்டாலின்!' - காஞ்சிபுரத்தில் கலகலத்த பொன்.ராதாகிருஷ்ணன்

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்,``தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாகக் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. காணொலி மூலம் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசிய பிறகு கூட்டம் தொடங்கியது.

கட்சிக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்கவில்லை. நாங்கள் கட்சியின் பூத் கமிட்டி உள்ளிட்டவற்றை ஏற்கெனவே பலப்படுத்தியிருக்கிறோம். அதனால், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பொன்.ராதாகிருஷ்ணன் - செய்தியாளர் சந்திப்பு
பொன்.ராதாகிருஷ்ணன் - செய்தியாளர் சந்திப்பு

இ-பாஸ் விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வரும் வழிமுறைகள் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனாலும்கூட அந்தந்த மாநிலங்கள் தங்களின் நிலைக்கு ஏற்ப சில முடிவுகளை எடுக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழக அரசும் செயல்படுகிறது.

அ.தி.மு.க அமைச்சர்கள் கிளப்பிய தலைநகர சர்ச்சை - பின்னணி நிலவரம் இதுதான்!

தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, `பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் கூட்டணி’ என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், நாங்கள் அங்கம்வகிக்கக்கூடிய கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும். அந்தக் கூட்டணியின் தலைமை யார் என்பது குறித்து நான் சொல்ல முடியாது.

அ.தி.மு.க யார் தலைமையில் தேர்தலைச் சந்திக்கும் என்பது பற்றி நான் கூற முடியாது
பொன்.ராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் தலைமை குறித்த பிரச்னை என்பது அந்தக் கட்சியின் விவகாரம். அது குறித்து அவர்கள் பேசி முடிவுக்கு வருவார்கள். தற்போது நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருந்துவருகிறோம். விநாகயர் சதுர்த்தி விழாவை எல்லா ஆண்டைப்போலவே நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுவது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. தி.மு.க-வில் 90 சதவிகிதம் பேர் இந்துக்களாக இருப்பதாக அக்கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார். அவர்கள், இப்போது உணர ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு வந்துவிட்டது.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

கூட்டணி குறித்து இதுவரை எங்களிடம் எந்தக் கட்சியும் பேசவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் 60 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட மக்களுக்கும், ஏமாற்றியவர்களுக்கும் இடையே போட்டி இருக்கும். பாரதிய ஜனதா கட்சி அங்கம்வகிக்கும் கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். தமிழகத்தின் தலைநகரம் சென்னையாக இருந்தாலும், தமிழின் தலைநகரம் மதுரை. அதை யாராலும் மாற்ற முடியாது. ராமநாதபுரம் மாவட்டம் போன்றவை இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கின்றன. அங்கு தொழில் வளர்ச்சி பெற வேண்டுமானால், மதுரையை இரண்டாம் தலைநகராக்குவது பொருத்தமானது.

செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன்
செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன்

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, `மதுரையில் பிரமாண்டமான தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும்’ என அறிவித்தார். அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு மதுரையை இரண்டாம் தலைநகராக உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு