Published:Updated:

`அடுத்த மகிளா காங்கிரஸ் தலைவி யார்?- வரிந்துகட்டும் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ் கோஷ்டிகள்

ப.சிதம்பரம்

``காங்கிரஸ் மாநில தலைவர் பதவி போட்டியை விட மகளிர் அணித் தலைவர் பதவிக்குத்தான் போட்டி அதிகமாக நடக்கிறது. சமீபகாலமாகவே ப.சிதம்பரத்தின் மதிப்பு தலைமையிடம் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. அதை நிலை நிறுத்துவதற்காகப் பலவேலைகளில் இறங்கியிருக்கிறார்.

`அடுத்த மகிளா காங்கிரஸ் தலைவி யார்?- வரிந்துகட்டும் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ் கோஷ்டிகள்

``காங்கிரஸ் மாநில தலைவர் பதவி போட்டியை விட மகளிர் அணித் தலைவர் பதவிக்குத்தான் போட்டி அதிகமாக நடக்கிறது. சமீபகாலமாகவே ப.சிதம்பரத்தின் மதிப்பு தலைமையிடம் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. அதை நிலை நிறுத்துவதற்காகப் பலவேலைகளில் இறங்கியிருக்கிறார்.

Published:Updated:
ப.சிதம்பரம்

காங்கிரஸ் மகளிரணித் தலைவர் பதவியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. இதில் எப்படியாவது தனது ஆதரவாளர்களுக்குப் பதவி வாங்கிக்கொடுத்து விட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் எதிரெதிர் துருவங்களில் நிற்கிறார்கள். அத்தோடு முன்னாள் மூத்த தலைவர்கள் பலர் டெல்லி தலைமையை நாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை சத்திய மூர்த்திபவன் என்றாலே அடிதடி கோஷ்டி மோதலுக்குப் பெயர் பெற்ற இடம். சமீபகாலமாகத்தான் சண்டை சச்சரவுகள் ஏதுவும் நிகழாமல் அமைதியான சூழல் நிலவுகிறது. அப்படி இருக்கும் சூழலில் ப.சிதம்பரம் ஒரு அணியினராகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், மாணிக்கம்தாகூர், கே.எஸ் அழகிரி என ஆறு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தனித்தனி அணியாகச் செயல்படுவதை நிறுத்தவேண்டும் என்று ராகுல் காந்தி பலமுறை சொல்லியும் கொஞ்சம்கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் அப்படியே நடந்துகொண்டிருக்கிறார்கள் மூத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.

விஜயதரணி, ஈ.வி.கே.எஸ்
விஜயதரணி, ஈ.வி.கே.எஸ்

இந்த நிலையில் தமிழக மகளிர் காங்கிரஸில், தற்போது கோஷ்டி பூசல் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில், சென்னை, அடையாறில், தற்போதைய, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர், ஜான்சிராணி தலைமையில், உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்குப் போட்டியாக, இரண்டு நாகளுக்கு முன்பு முன்னாள் எம்.எல்.ஏ., யசோதா அணி சார்பில், மகளிர் தின விழா நடந்தது. இரண்டு விழாக்களிலும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்றார். ஜான்சிராணி பதவியேற்று, நான்கு ஆண்டுகளாகி விட்டதால், புதிய தலைவரை நியமிக்க, டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளது. அதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், ஏழு பேரை அழைத்து, டெல்லி மேலிடம் நேர்காணல் நடத்தியுள்ளது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இறுதிப்பட்டியலில், அகில இந்தியக் காங்கிரஸ் செயலர்கள், ஹசீனா சையது, சுதா ஆகிய இருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சிதம்பரத்தின் ஆதரவு, ஹசீனா சையதுக்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவு, சுதாவுக்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது. யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல், அழகிரி நடுநிலையாக உள்ளார். இதற்கிடையில், ஜான்சிராணியே தலைவராக நீடிக்க, அகில இந்திய காங்கிரஸ் செயலர், மாணிக்கம்தாகூர் காய் நகர்த்தி வருகிறார்.

காங்கிரஸ் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``மாநில தலைவர் பதவி போட்டியை விட மகளிர் அணித் தலைவர் பதவிக்குத்தான் போட்டி அதிகமாக நடக்கிறது. சமீபகாலமாக ப.சிதம்பரத்தின் மதிப்பு தலைமையிடம் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. அதை நிலை நிறுத்துவதற்காகப் பலவேலைகளில் இறங்கியிருக்கிறார். அதைத்தொடர்ந்து எப்படியாவது ஹசீனா சையதுக்குத் தலைவர் பதவியை வாங்கிக்கொடுத்து மீண்டும் டெல்லி நேரடிப் பார்வையில் தம்மீது இருப்பதாகக் காட்டும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்.

ராகுல்
ராகுல்

அதைத்தொடர்ந்து ஈ.வி.கே எஸ் இளங்கோவனும் எம்.பி தேர்தலில் தோல்வியுற்ற பிறகு பெரிதாகக் கட்சி உள்விவகாரங்களில் தலையிடுவதுமில்லை. அத்தோடு இந்தப் பதவியை எப்படியாவது அவரது ஆதரவாளரான சுதாவிற்குக் வாங்கிக்கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதோடு, அதற்காக டெல்லி தலைமையையும் நாடி வருகிறார். ஆனால் மாணிக்கம்தாகூர் ஒரு படி மேலே போய் `ஜான்சிராணி பதவியேற்று நான்கு வருடங்கள் ஆகிறது. சிறப்பாகச் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார். அவரை மாற்றினால் அடுத்தடுத்து பல்வேறு சண்டை சச்சரவுகள் வரும் அதற்கு நாம் இடம் தரக்கூடாது' என்று டச்சிங்காக டெல்லி தலைமையிடம் பேசிக்கொண்டிருக்கிறாராம்.