Published:Updated:

`ஆட்சி அமைக்கவே 5 வாரம்.. இதில்?!’ - சிவசேனாவை கலாய்த்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர்

முன்னாள் முதல்வர் நாராயன் ரானே
முன்னாள் முதல்வர் நாராயன் ரானே

``சிவசேனாவில் உள்ள 56 சட்டமன்ற உறுப்பினர்களில் 35 உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது” என்றும் முன்னாள் முதல்வர் நாராயன் ரானே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவேசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தவ் தாக்கரே அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்று ஒரு மாதத்துக்குப் பிறகு மகாராஷ்டிரா அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். சிவசேனா கட்சியின் உறுப்பினர்கள் உட்பட கூட்டணிக்கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகின.

உத்தவ் - பவார்
உத்தவ் - பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் சோலங்கே மற்றும் சிவசேனாவின் அப்துல் சத்தார் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தகவல்கள் வெளியாகின. கட்சியின் தலைமை நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அம்முடிவைக் கைவிட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் நாராயன் ரானே ``சிவசேனாவில் உள்ள 56 சட்டமன்ற உறுப்பினர்களில் 35 உறுப்பினர்களுக்குக் கட்சியின் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார். இதனால், மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.

`சிவசேனா முதல்வர்; என்.சி.பி துணை முதல்வர்!' - மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம்

பா.ஜ.க-வின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நாராயன் ரானே நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில்,``உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு செயல்படாத அரசு. பா.ஜ.க-வில் 105 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், சிவசேனாவில் 56 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களில் 35 பேர் அக்கட்சி தலைமையின் மீது அதிருப்தி உடையவர்கள். பா.ஜ.க மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்கும்.

நாராயன் ரானே
நாராயன் ரானே

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படும் என தாக்ரே வெற்றான வாக்குறுதியை அளித்துள்ளார். அது, எப்போது செயல்படுத்தப்படும் என்பதுக்கான நேரமும் அறிவிக்கப்படவில்லை. அவுரங்காபாத்துக்கு வந்த முதல்வர் அங்கு எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் எதுவும் பேசவில்லை. இத்தகைய அரசாங்கத்திடமிருந்து நாங்கள் எதை எதிர்பார்க்க முடியும். அரசாங்கத்தை நடத்துவது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அரசாங்கத்தை அமைப்பதுக்கே ஐந்து வாரத்தை எடுத்துக் கொண்டார்கள். இதிலிருந்தே ஆட்சியை எவ்வாறு நடத்துவார்கள் என்று தெரிகிறது” என்று பேசியுள்ளார்.

`பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனாவா இது?’ - பி.ஜே.பி-யுடன் தொடர் மோதலில் உத்தவ் தாக்கரே!
அடுத்த கட்டுரைக்கு