Published:Updated:

"அன்று வாஜ்பாய் அச்சம் கொண்டது... இன்று உண்மையாகிவிட்டது" - எம்.பி மஹுவா மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா

``1972-ல் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில், ``தேர்தல் முடிவுகள் வானளாவிய அதிகாரங்களை பிரதமரின் கையில் கொடுத்துள்ளது. ஆனால், அனைத்து அதிகாரமும் புது டெல்லியில் குவிந்துள்ளது” - எம்.பி மஹுவா மொய்த்ரா

"அன்று வாஜ்பாய் அச்சம் கொண்டது... இன்று உண்மையாகிவிட்டது" - எம்.பி மஹுவா மொய்த்ரா

``1972-ல் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில், ``தேர்தல் முடிவுகள் வானளாவிய அதிகாரங்களை பிரதமரின் கையில் கொடுத்துள்ளது. ஆனால், அனைத்து அதிகாரமும் புது டெல்லியில் குவிந்துள்ளது” - எம்.பி மஹுவா மொய்த்ரா

Published:Updated:
மஹுவா மொய்த்ரா

நாடாளுமன்ற கூட்டத்தில் எப்போது பேசினாலும், தேசிய அளவில் கவனம் ஈர்த்து விடுவார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா. பிரதமர் மோடியின் அரசாங்கத்தையும், அதன் கொள்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து பல்வேறு கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி வருகிறார்.

அந்த வகையில், நேற்று நாடாளுமன்றத்தில் 2022-23 சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மேற்குவங்க எம்.பி மஹுவா மொய்த்ரா, "முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 1972-ல் நாடாளுமன்றத்தில் கூறியதை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

`தற்போது புது டெல்லி-யின் சூழல் மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. சுதந்திரமாகச் சுவாசிப்பது கூட எளிதாக இல்லை. காலை எழுந்தது முதல் இரவு வரை அகில இந்திய வானொலியில் ஒரு பிரதமரின் பெயரைக் கோஷமிடுவதும், சினிமா திரைகளில் பொய்யான அல்லது மிகைப்படுத்தப்பட்ட பிரசாரம் செய்யும் இந்த அரசை எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பவர்கள் எப்படி எதிர்த்துப் போராட முடியும்.

எதிர்ப்புக் குரல் எழுப்புவது ஒரு கிளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது' எனக் கேள்வி எழுப்பியிருந்தார் வாஜ்பாய். இன்று வாஜ்பாய் இருந்த கட்சியே நாடாளுமன்றத்தை ரோம தேசத்தின் கொலோசியம் போல மாற்றியமைத்திருப்பது இந்தியாவின் மிகப்பெரிய சோகம். வாஜ்பாய் எதை அச்சப்பட்டாரோ அதை அவரின் அரசே செய்துக்கொண்டிருக்கிறது. வாஜ்பாய்-ன் மிகப்பெரும் அச்சங்கள் தற்போது உண்மையாகிவிட்டன” எனப் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திரா காந்தி - வாஜ்பாய்
இந்திரா காந்தி - வாஜ்பாய்

1972-ல் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில், ``தேர்தல் முடிவுகள் வானளாவிய அதிகாரங்களை பிரதமரின் கையில் கொடுத்துள்ளது. ஆனால், அனைத்து அதிகாரமும் புது டெல்லியில் குவிந்துள்ளது. மத்திய அமைச்சர்கள் டெல்லி பிரதமரின் செயலகம் எனும் தர்பார் அமைச்சரவையாக மாறியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரதமர் உச்சியில் நின்றும், அவருடைய சகாக்கள் அவருடைய காலடியில் கிடக்கிறார்கள். இந்தச் சூழ்நிலை ஒரு தனிமனிதனைச் சர்வாதிகாரியாக நிலைநிறுத்தப்படும் அபாயகரமான சாத்தியக்கூறுகள் நிறைந்ததல்லவா? இந்த நாள்களில் புது டெல்லியின் சூழல் மூச்சுத் திணற வைக்கிறது. சுதந்திரமாகச் சுவாசிப்பது எளிதல்ல.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

எதிர்ப்புக் குரல் எழுப்புவது ஒரு கிளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. காலை முதல் இரவு வரை அகில இந்திய வானொலியில் பிரதமரின் பெயரை உச்சரிப்பது, சினிமா திரைகளில் பொய்யான அல்லது மிகைப்படுத்தப்பட்ட பிரசாரம், இதையெல்லாம் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பவர்கள் எப்படி எதிர்த்துப் போராட முடியும்?" என வாஜ்பாய் கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜகவின் அமோக வெற்றிக்குப் பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியபோது, ​​மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் பிரதமர் மோடியின் பெயரைக் கோஷமிட்டு வரவேற்றதைக் குறிப்பிடும் வகையிலும்,

 மஹூவா மொய்த்ரா
மஹூவா மொய்த்ரா

விவேக் அக்னிஹோத்ரியின் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" எனும் திரைப்படத்துக்கு பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தைக் குறிப்பிடும் வகையிலும் மஹுவா மொய்த்ரா இந்த கருத்துகளை கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism