Published:Updated:

``ஓராண்டில் நூற்றாண்டு சாதனை" - ஸ்டாலினைத் தொடர்ந்து புகழும் பாமக எம்.எல்.ஏ சொல்வதென்ன?

மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார் ( தே.சிலம்பரசன் )

தமிழ்நாட்டில், எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருக்கும் பாமக-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர், முதலமைச்சர் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

``ஓராண்டில் நூற்றாண்டு சாதனை" - ஸ்டாலினைத் தொடர்ந்து புகழும் பாமக எம்.எல்.ஏ சொல்வதென்ன?

தமிழ்நாட்டில், எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருக்கும் பாமக-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர், முதலமைச்சர் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

Published:Updated:
மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார் ( தே.சிலம்பரசன் )

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெறுவதையொட்டி, ஓராண்டு சாதனை குறித்த புத்தகம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாவட்ட அமைச்சர்களான பொன்முடி, மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், திமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதேவேளையில், மயிலம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ சிவக்குமாரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஓராண்டு சாதனை மலர் வெளியீடு
ஓராண்டு சாதனை மலர் வெளியீடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது பேசியவர், "தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின், இந்த ஓராண்டில் நூற்றாண்டுச் சாதனையைப் படைத்து இந்தியாவே திரும்பி பார்க்கின்ற முதல்வராகச் செயல்படுகிறார். இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், 10 மாத காலத்தில் கொரோனாவை விரட்டியடித்தது என தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சிபுரிகிறார்" எனப் புகழாரம் சூட்டினார். இந்தப் பேச்சு, அங்கிருந்த தி.மு.க தொண்டர்களையே ஒரு கணம் உறைய வைத்ததுவிட்டது எனலாம். கடந்த 8-ம் தேதி, மயிலம் தொகுதிக்கு உட்பட்ட செல்லப்பிராட்டி ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசியிருந்த இவர், "ஐந்து முத்தான திட்டங்களை சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 100 ஆண்டுகளில் செய்யாத சாதனையை ஓராண்டில் செய்துள்ளார்" என்று கூறி இதே போன்று பேசியிருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாட்டில், எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருக்கும் பா.ம.க-வைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ-வே, ஆளுங்கட்சியின் முதல்வரை தொடர்ச்சியாகப் போற்றிப் புகழும் சம்பவம் நடைபெற்றுவருகிறது.

பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸோ... 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி'-க்கு அடுத்தபடியாக 'பா.ம.க 2.0' எனும் புது யுக்தியைக் கையிலெடுத்து மாவட்டம்தோறும் தொண்டர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார். '2026-ல் பா.ம.க தலைமையில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்' எனும் முழக்கத்தையும் தொடர்ந்து தொண்டர்களிடம் முன்வைத்துவருகிறார்.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

அப்படியிருக்க, மயிலம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க உறுப்பினர் சிவக்குமாரின் பேச்சுகள் அதிக கவனம் ஈர்த்திருப்பதோடு, அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக, மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமாரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். "இது புகழ்ந்து பேசுவதில்லை. அதற்குக் காரணங்கள் ஏதுமில்லை. தமிழ்நாட்டு முதல்வர் கொரோனா சமயத்திலும் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்பதுதான். இப்போது தி.மு.க ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாங்கள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கிறோம். அப்படியிருந்தும், எங்களுடைய தொகுதிக்காக நாங்கள் சொல்லும் பணிகளும் நடைபெறுகின்றன. கட்சியைத் தாண்டி, தொகுதி மக்களின் நலனையும் பார்க்கவேண்டியிருக்கிறது. அந்த அடிப்படையில், ஆட்சியைச் சிறப்பாகச் செய்கிறார் ஸ்டாலின்.

மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் (FB), முதலமைச்சர் ஸ்டாலின்
மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் (FB), முதலமைச்சர் ஸ்டாலின்

எங்களுடைய குறிக்கோள், 2026-ல் அன்புமணி அவர்களால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆட்சியைப் பிடிப்பதற்கான திறமையும் வாய்ப்பும் எங்கள் அண்ணன் அன்புமணி அவர்களுக்கு இருக்கிறது. தேர்தலைச் சந்திக்கும் நேரம் வரும்போது, பா.ம.க-வின் வியூகத்தை அப்போது சொல்வோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism