Published:Updated:

"லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோலில் எப்படிப்பட்ட நிலைமையையும் சமாளிக்க தயார்" - ராணுவ தளபதி மனோஜ் பாண்டே

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ( முகநூல் பக்கம் )

`நாட்டையும் அதன் எல்லைகளையும் பாதுகாப்பதில் இந்திய ராணுவத்தின் பங்களிப்பு, வீரம் ஈடு இணையற்றது. இந்த ராணுவ தினத்தில் ஒவ்வோர் இந்தியனும் நம்முடைய ராணுவத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள்.' - பிரதமர் மோடி

"லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோலில் எப்படிப்பட்ட நிலைமையையும் சமாளிக்க தயார்" - ராணுவ தளபதி மனோஜ் பாண்டே

`நாட்டையும் அதன் எல்லைகளையும் பாதுகாப்பதில் இந்திய ராணுவத்தின் பங்களிப்பு, வீரம் ஈடு இணையற்றது. இந்த ராணுவ தினத்தில் ஒவ்வோர் இந்தியனும் நம்முடைய ராணுவத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள்.' - பிரதமர் மோடி

Published:Updated:
ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ( முகநூல் பக்கம் )

பெங்களூருவில் நடந்த ராணுவ தின அணிவகுப்பில் கலந்துகொண்ட இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ``நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவம் மிகவும் கவனமாகச் செயல்பட்டு வருகிறது. லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோலில் எந்தவொரு தாக்குதலையும் எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ராணுவ தின அணிவகுப்பு 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து டெல்லியில்தான் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதன்முறையாக அந்த அணிவகுப்பானது கர்நாடகாவின் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. ராணுவ தினமான (ஜனவரி 15) இன்று, இரு சக்கர வாகன சாகசம், ஸ்கைடைவிங், கண்கவர் அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெற்றன.

மோடி
மோடி

இந்த நிகழ்ச்சியில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே உட்பட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, ``நாட்டையும் அதன் எல்லைகளையும் பாதுகாப்பதில் இந்திய ராணுவத்தின் பங்களிப்பு, வீரம் ஈடு இணையற்றது. இந்த ராணுவ தினத்தில் ஒவ்வோர் இந்தியனும் நம்முடைய ராணுவத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

பெங்களூரு ஹலசுருவிலுள்ள மெட்ராஸ் இன்ஜினீயர்ஸ் குரூப் (எம்.இ.ஜி) தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``ஜம்மு மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய முயற்சிகளை முறியடிக்க ஜாமர்கள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறோம். அதனால், நம்மால் ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்க முடிகிறது. லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோலில் போர்நிறுத்தம் தொடர்கிறது, ஊடுருவல்களும் குறைந்திருக்கின்றன.

ஜெனரல் மனோஜ் பாண்டே
ஜெனரல் மனோஜ் பாண்டே

ஆனால், அந்த எல்லையில் மறுபுறத்தில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் இருக்கின்றன. நமது படைகள் போருக்குத் தயார் நிலையில் இருக்கின்றன. சமீபத்திய தொழில்நுட்பங்களை ராணுவத்தில் மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜம்மு-காஷ்மீர் மக்கள் வன்முறையை முற்றிலுமாக நிராகரித்திருக்கின்றனர். ஆனால், சில பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களைக் குறிவைத்து வருகின்றன. நமது ஆயுதப் படைகள் இத்தகையை முயற்சிகளைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன" என்றார்.