Published:Updated:

உருமாறிய மக்கள் நீதி மய்யம்... கைகொடுக்குமா கமல்ஹாசனின் புதிய திட்டம்?!

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்

சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த அதே கோவை மண்ணிலிருந்து அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவருகிறார் கமல்.

உருமாறிய மக்கள் நீதி மய்யம்... கைகொடுக்குமா கமல்ஹாசனின் புதிய திட்டம்?!

சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த அதே கோவை மண்ணிலிருந்து அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவருகிறார் கமல்.

Published:Updated:
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்

``தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம் என வருத்தப்படாதீர்கள். வெற்றி பெற்றிருந்தால்கூட நமக்கு இவ்வளவு மக்கள் ஆதரவு இருப்பது தெரிந்திருக்காது. பிரதான கட்சிகள் கோடிகளை இறக்கியபோதும், நாம் நேர்மையை மட்டும் முன்னிறுத்தி வெற்றியை நெருங்கியிருக்கிறோம். நான் தோல்வியடைந்ததும் எத்தனையோ பேர் வருத்தப்பட்டனர். என் வாழ்க்கையில் திரைப்படங்கள் தொடங்கி பல விஷயங்களில் தோல்விகள்தான் நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளன.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படித்தான் இந்தத் தேர்தலும். இப்போது துரோகிகளும் நம்மைவிட்டு விலகிவிட்டனர். உருமாறிய கொரோனாபோல, உருமாறிய மக்கள் நீதி மய்யமாக நிற்கிறோம். இனி படிப்படியாக நல்லது நடக்கும்.”

கோவையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் உதிர்த்த வார்த்தைகள் இவை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவை தெற்குத் தொகுதியில் 19 சுற்றுகளில் முன்னிலை வகித்தாலும், நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அதன் பிறகு துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ம.நீ.ம-வுக்கு குட்பை கூறி நடையைக் கட்டினர்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

`அவ்வளவுதான். இனி கமல் சினிமாவுக்குப் போய்விடுவார்’ என்ற கருத்து பரவலாகப் பரவியது. ஆனால், தோல்வியடைந்த அதே கோவை மண்ணிலிருந்து அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவருகிறது மக்கள் நீதி மய்யம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் கமல் கோவை வந்திருந்தார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவரது நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஆனாலும், மூன்று நாள்கள் கோவையிலேயே தங்கி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்தியிருக்கிறார் கமல்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களிடம் பேசினோம். ``உண்மையில் தேர்தல் தோல்வி எங்களைக் கடுமையாக பாதித்தது. தலைவரின் நம்பிக்கை நிறைந்த பேச்சு இப்போது உந்துதலைக் கொடுத்திருக்கிறது. கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த ஆரம்பத்திலேயே பல முயற்சிகள் நடந்தன.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஆனால், அப்போது முக்கியப் பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் அதற்கு முட்டுக்கடையாக இருந்தனர். இப்போது கட்டமைப்பில்தான் கவனம் செலுத்துகிறோம். தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைத்துவருகிறோம். ஒவ்வொரு பூத்துக்கும் குறைந்தது மூன்று பேரை நியமிக்க முடிவு செய்திருக்கிறோம்.

இது தவிர 12,000 போஸ்ட்டிங் முடிவு செய்யப்பட்டு பெண்டிங்குகள் இருக்கின்றன. அதையெல்லாம் நிரப்பப்போகிறோம். முன்பு இருந்தவர்களைக் கடந்து, கட்சியிலுள்ள நிலவரம், பிரச்னைகளைத் தலைவர் காதுக்கு எடுத்துச் செல்வதில் சிரமம் இருந்தது. அவர்களைத் தாண்டி தலைவரை நெருங்கவே முடியாது. இப்போது பலர் விலகிவிட்டனர். சிலர் ஒதுங்கிவிட்டனர்.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம்

ஆன்லைன் மூலம் உறுப்பினர்களைச் சேர்ப்பது, பொறுப்புகளை நியமிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. நிர்வாகிகளுக்கு ஸ்டார் அடிப்படையில் ரேட்டிங் வைத்து காண்காணிக்கப்போகிறோம். சிறப்பாகப் பணி செய்பவர்களுககு அடுத்தகட்ட பெரிய பொறுப்புகள், சிறப்புப் பரிசுகள் வழங்கவிருக்கிறோம்.

அதில் ஒரு பிரிவாக சிறப்பாகப் பணியாற்றுபவர் தலைவருடன் ஒரு டின்னர், தேநீர் விருந்துபோல ஏற்பாடு செய்து உற்சாகப்படுத்தவிருக்கிறோம். கமலின் அணுகுமுறையிலும் நிறைய மாற்றங்கள் உள்ளன. முன்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் கமலுக்குப் பெரிதாக உடன்பாடு இருக்காது. அதனால், மக்களுக்கு வேறுவிதங்களில் பிரச்னை வந்துவிடக் கூடாது என்று சொல்வார். ஆனால், போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை உணர்ந்துவிட்டார்.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம்

அதனால் சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தோம். ஆகஸ்ட் 15 கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்திருக்கிறோம். கோவையில் கமலே நேரடியாக மனு அளித்திருக்கிறார்.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக ரியாக்ட் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் வேண்டும் என்று கமல் கூறியிருக்கிறார். இதேபோல பல விஷயங்களை முன்மொழிவார். போராட்டங்களும் தொடரும். பி.ஜே.பி-யின் `பி டீம்’ என்ற அடையாளத்தை உடைக்கவும் தயராகிவருகிறார். கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்,

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

``பி.ஜே.பி-க்கு எதிராக மம்தா உருவாக்கிவரும் அணியில் இணைந்து செயல்படத் தயராக இருக்கிறேன்’’ என்ற கமல், மேக்கேதாட்டு, கொங்கு நாடு விஷயங்களில் பி.ஜே.பி-யை கடுமையாகச் சாடியிருந்தார். அதேபோல ஆர்.டி.ஐ மூலமாகவும், உள்ளூர் பிரச்னைகளைத் தோண்டித் துருவி போராட திட்டமிட்டிருக்கிறோம்.

நிர்வாகிகள், தொண்டர்கள் கமல்ஹாசனை நெருங்க முடியவில்லை என்பதைப் பலரும் குறையாகவே கூறிவந்தனர். ஆனால், இந்தமுறை கோவைக்கு வந்தபோது கமல் பல நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்று நலம் விசாரித்தார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். கமலே நேரடியாக மாவட்டச் செயலாளர்களிடம் பேசுகிறார். கமலைச் சந்திக்க அப்பாய்மென்ட் தொடர்பாக, அவரது நேரடிக் கண்காணிப்பில் ஒரு மெயில் ஐ.டி உள்ளது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அதிலேயே நாம் தகவல்களைக் கொடுத்தால் உடனடியாக அடுத்தகட்ட நடைமுறைகளுக்குச் சென்றுவிடும். கூட்டணி விஷயத்திலும் நிர்வாகிகளின் குரல்களைப் பொறுமையாக கேட்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட்டு, கட்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வோம்” என்றனர்.

கமல் தேர்தலில் போட்டியிட்டபோது இருந்த உற்சாகத்தைவிட, கமலின் இந்த வருகை ம.நீ.ம வட்டாரங்களில் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. கோவை சிட்டி முழுவதும் கமல் போஸ்டர்களே தென்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும் ம.நீ.ம கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை வெளியீடு, 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தொடக்கம், தேர்தலில் போட்டியிட்டது என்று கமலுக்கு கோவை சென்டிமென்ட் அதிகம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்தமுறையும் கோவை கலெக்டர் காலனி அணிவித்த மாற்றுத்திறனாளி சிறுவன் குடும்பத்துக்கு தள்ளுவண்டி வழங்கியது, தொழில் அமைப்பினர், முக்கியஸ்தர்களைச் சந்தித்து உரையாடியது என கோவை மீதும் தனி அக்கறையோடு இருக்கிறார். கோவையில் ம.நீ.ம-வுக்கு பெரிய அஸ்திவாரம் தோண்டப்பட்டிருப்பதால், கமல் அடுத்த தேர்தலிலும் கோவையில் போட்டியிட வாய்ப்புள்ளது என்கின்றனர் மய்யத்தினர்.

ஆனால், இப்போதும்கூட கமலை நெருங்குவதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக ம.நீ.ம தொண்டர்கள் வருந்துகின்றனர். ``முன்பிருந்த நிலை இப்போது இல்லைதான். ஆனால், அப்போது ஏழு கட்டம் தாண்டிச் செல்ல வேண்டும் என்றால், இப்போது மூன்று கட்டங்களைத் தாண்டிச் செல்லவேண்டியிருக்கிறது. தலைவர் ஆர்வமாக, நேர்மையாக இருக்கிறார். இடையிலுள்ள சிலர் அப்படி இல்லை. அவர்கள் தலைவரை நெருங்க விடுவதில்லை. அவர்கள் மூலம் நிர்வாகிகள் நியமனங்களிலும் தவறு நடக்க வாய்ப்புள்ளது. பலர் அரசுப் பணி, ஐடி பணியில் இருந்துகொண்டே கமல் மீதுள்ள நம்பிக்கையில் இப்போதுவரை அவருடன் பயணிக்கிறோம். இதன் பிறகு தலைவர் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படக் கூடாது. அவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் வர வேண்டும். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து தீர்வு வாங்கித்தர துணை நிற்க வேண்டும்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஒவ்வொரு பகுதியிலும் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் என்று பல அடிப்படைத் தேவைகளுக்கே போராடிக்கொண்டிருக்கின்றனர். சரியான நிர்வாகிகளை நியமித்து அந்தப் பிரச்னைகளை அணுகி, தலைவரும் மக்களைச் சந்தித்து பேசினால்தான், இந்தத் தேர்தலில் ஏற்பட்ட சங்கடம் அடுத்த தேர்தலில் இருக்காது” என்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism